"மாதம்பட்டி ரங்கராஜ் என்னை ஏமாற்றிவிட்டார்" ... "எனக்கும் என் குழந்தைக்கும் நீதி வேண்டும்" - ஜாய் கிரிஸில்டா புகார்!
வெள்ளித்திரை நடிகரும் சமையல் கலையால் புகழ்பெற்றவருமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை ஏமாற்றி விட்டதாகவு ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ரங்கராஜ் எனது கணவர். எம்.ஆர்.சி. நகர் கோவிலில் திருமணம் செய்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்தோம். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக அவர் என்னை விட்டு விலகி விட்டார். என்னிடம் தொடர்பை முற்றிலும் துண்டித்துள்ளார்.
நான் அவரை நேரில் சந்திக்க முயன்றபோது, இரண்டு முறையும் என்னை அடித்து விரட்டியுள்ளார். தொடர்ந்து அவருடன் பேச முயன்றும், அவருடைய நண்பர்கள் என்னை சந்திக்க விடாமல் தடுக்கின்றனர். இப்போது என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை. எனக்கும் என் குழந்தைக்கும் நேர்ந்த இந்த ஏமாற்றத்திற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும். அவர் என்னுடன் சேர்ந்து வாழ போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், “நானும் ரங்கராஜும் இணைந்து வாழ்ந்தது உண்மை. ஆனால் இப்போது என்னை விட்டு விலகியுள்ளார். எனக்கும் என் குழந்தைக்கும் நீதி வேண்டும்” என தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.