For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திமுகவின் மூன்றாண்டு ஆட்சியில் நிறைவேற்றியுள்ள திட்டங்கள் என்னென்ன?

07:31 PM May 07, 2024 IST | Web Editor
திமுகவின் மூன்றாண்டு ஆட்சியில் நிறைவேற்றியுள்ள திட்டங்கள் என்னென்ன
Advertisement

மகளிர் உரிமைத் தொகை திட்டம் உள்பட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திமுக அரசு நிதி நெருக்கடியிலும் கடந்த மூன்றாண்டுகளில் நிறைவேற்றியுள்ள வெற்றித் திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மூன்று ஆண்டுகள் வளர்ச்சி மக்கள் மனங்களில் மகிழ்ச்சி

1. குடும்ப முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நாளும் தொண்டு செய்யும் இல்லத்தரசிகளின் தன்னம்பிக்கையை வளர்த்திட கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் 1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

2. தாய்க்குலம் மகிழ பள்ளி வரும் குழந்தைகளின் பசி போக்கிப் பாடநூல்களில் கவனம் செலுத்தச் செய்யும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். இந்த திட்டத்தின் வாயிலாக 31,000 அரசுப் பள்ளிகள். 18 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பயனடைகின்றனர்.

3. படிப்பை தொடரும் வசதியில்லா குடும்பங்கள் சார்ந்த மகளிரை கல்லூரிகள் நோக்கி செல்லவைக்கும் புதுமைப் பெண் திட்டம்.

2.73 லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய்

4. வீட்டிற்குள் அடைபட்டுக்கிடக்கும் மகளிர் விருப்பம் போல் வெளியில் செல்ல கட்டணமில்லா பேருந்து பயணம். இதுவரை மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் என 445 கோடி முறை பயணம்! இதன்வாயிலாக மாதந்தோறும் ஒவ்வொரு பெண்ணும் ரூ.888 சேமிப்பு!

5. மருத்துவமனை தேடிச் சென்று மருந்து வாங்க முடியாதவர்களுக்கு உதவும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம். 1 கோடியே 70 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

6. கிராமங்களின் பொருளாதார புரட்சிக்கு வித்திட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 170 ஆயிரம் கோடி வங்கிக் கடன் தரப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 12 லட்சம் மகளிர் குழுக்கள் பயனடைந்துள்ளது.

7. 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக 2,99,384 ஏக்கரில் பயிர் சாகுபடி நடந்துள்ளது.

8. கிராமங்களின் வளர்ச்சிக்காக முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் வாயிலாக ரூ.1,501 கோடி மதிப்பீட்டில் 4,812 கி.மீ. சாலைகள் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.

9. படித்த இளைஞர்களுக்கு வேலைக்கேற்ற திறன் பயிற்சிகள் வழங்கிடும் "நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 28 லட்சம் இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்.

10. வேளாண் உற்பத்தி பெருகிட கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 26 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 28 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

11. தொழில் வளம் பெருகிட புதிய முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகள் அளிக்கும் முதலீட்டாளர்களின் ஒப்பந்தங்களின் மூலம் 9 லட்சத்து 61 ஆயிரம் கோடி ரூபாய் புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம், 30 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

12.மனிதநேயத்தோடு மதித்திட மாற்றுத்திறனாளிக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.1,500-லிருந்து ரூ.2,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

13. இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் 1.65 லட்சம் தன்னார்வலர்கள் உழைப்பில் 24 இலட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

14. இறையன்பர்கள் இதயம் குளிர 1,477 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு விழாக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

15. ரூ.5,996.53 கோடி மதிப்பிலான 6,800.68 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது

16. உடனுக்குடன் உதவிகள் வழங்கிடும் 30,000 இ-சேவை மையங்கள்

17. பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன் காக்க நடவடிக்கை

18. 62,229 பயனாளிகளுக்கு ரூ.406.22 கோடி கடன் உதவி!

19. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 28,601 அரசுப் பள்ளி மாணவ மாணவியர் பயனடைந்துள்ளனர்.

20.ரூ.4,818 கோடி கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு 13 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

21 கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம், விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டதன் வாயிலாக 2,38,163 நெசவாளர் குடும்பங்கள் பயனடைந்துள்ளன.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
Advertisement