கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன?
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பதை தற்போது பார்க்கலாம்...
பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 88 ஏக்கர் பரப்பளவில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
28.25 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம், கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள், முழு குளிர்சாதன வசதி, மழை நீர் வடிகால்கள், சூரிய தகடுகள், 2,285 பார்க்கிங் வசதிகள், 500 தனியார் பேருந்து நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தை அடையும் வகையில் நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கண் பார்வையற்றவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பிரெய்லி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
கியூஆர் கோடு டிக்கெட்டுகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, ஏடிஎம் மையங்கள், காவல் கட்டுப்பாட்டு அறைகள், போக்குவரத்து அலுவகலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புயல் மற்றும் வெள்ளக் காலங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க வெள்ள நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.