அமோனியா வாயுவை சுவாசிப்பதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன?
அமோனியா வாயுவின் பயன்கள் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய தீமைகள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்...
அமோனியா 100 ஆண்டுகளுக்கு மேல் உலகளவில் உற்பத்தி செய்து பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வேதிப்பொருள். உலகில் உற்பத்தி செய்யப்படும் 83 சதவீத அமோனியா, உரத் தயாரிப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் ஆண்டிற்கு 110 மில்லியன் டன் அமோனியா உரமாக பயன்படுத்தப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் 28 புள்ளி 6 சதவீதம், இந்தியாவில் 8 புள்ளி 6 சதவீதமும் அம்மோனியா உற்பத்தி செய்யப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலும் உற்பத்தி செய்யப்படும் அமோனியாவில் 80 சதவீதம், ரசாயன உரத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
அமோனியா வாயு நச்சுத்தன்மை மிகுந்தது என்பதால், அது காற்றில் கலக்கும்போது சுமார் 5 மணி நேரம் வரை அதன் தாக்கம் நீடிக்கும். குறைந்த அளவு அமோனியா வாயு சுவாசிக்கும்போது கண்ணெரிச்சல், மயக்கம் போன்ற பாதிப்புகளும், அதிகளவு சுவாசித்தால் மூச்சுத் திணறலும் ஏற்படும். அமோனியா வாயுவை வெகுநேரம் சுவாசிக்கும்போது, நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு மரணம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக நியூஸ்7 தமிழுக்கு மருத்துவர் ஒருவர் அளித்த பிரத்யேக தகவல்களை காண :