பாஜக நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன?
நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில் நட்சத்திர வேட்பாளர்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றனர் என்பது குறித்து காணலாம்.
மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயராகி வரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சியினர் இறங்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக பாஜக சார்பில் நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் களம் இறங்க உள்ள அக்கட்சியின் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் இன்று (02.03.2024) வெளியிடப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக தேசியப் பொதுச் செயலாளர் வினோத் தவ்டே வெளியிட்டார்.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜீஜூ - அருணாச்சல பிரதேசம் (மேற்கு)
மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா - போர்பந்தர்
மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர் - திருவனந்தபுரம்
மத்திய அமைச்சர் முரளிதரன் - ஆட்டிங்கால்
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா - குணா (ம.பி)
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் - லக்னோ
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் - ஜோத்பூர்
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் - ஜோத்பூர் (ராஜஸ்தான்)
மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் - பீகானீர்
மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் - ஆல்வார்
மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி - பார்மர்
மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா - கோட்டா (ராஜஸ்தான்)
மனோஜ் திவாரி - வடகிழக்கு டெல்லி
கிஷண் ரெட்டி - செகந்திராபாத்
சுரேஷ் கோபி - திருச்சூர்
ஹேமமாலினி - மதுரா
ஸ்மிரிதி இராணி - அமேதி
முன்னாள் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ்சிங் சவுகான் - விதீஷா (ம.பி)
ராஜஸ்தான் பாஜக தலைவர் சிபி ஜோஷி - சித்தோர்கர்
ஆகியோர் போட்டியிடுகின்றனர்.