தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன? முழு விவரம் இதோ!
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன? என்பது குறித்த முழு விவரத்தை அக்கட்சி வெளியிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்களும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், பாஜக சார்பில் தமிழ்நாட்டில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பட்டியல் ஏற்கனவே வெளியானது.
- தென் சென்னை: தமிழிசை சவுந்தரராஜன்
- கோவை : அண்ணாமலை
- கன்னியாகுமரி: பொன். ராதாகிருஷ்ணன்
- நெல்லை : நயினார் நாகேந்திரன்
- வேலூர் : ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக் கட்சி)
- மத்திய சென்னை: வினோத் பி.செல்வம்
- நீலகிரி(தனி தொகுதி): எல்.முருகன்
- கிருஷ்ணகிரி: சி.நரசிம்மன்
- பெரம்பலூர்: பாரிவேந்தர் (ஐ.ஜே.கே)
இதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளின் முழு பட்டியல் வெளியாகியுள்ளது.
இதன்படி, பாஜக போட்டியிடும் தொகுதிகள்
- திருவள்ளூர்
- வட சென்னை
- தென் சென்னை
- மத்திய சென்னை
- கிருஷ்ணகிரி
- திருவண்ணாமலை
- நாமக்கல்
- திருப்பூர்
- நீலகிரி
- கோயம்புத்தூர்
- பொள்ளாச்சி
- கரூர்
- சிதம்பரம்
- நாகப்பட்டினம்
- தஞ்சாவூர்
- மதுரை
- விருதுநகர்
- திருநெல்வேலி
- கன்னியாகுமரி
பாஜக சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் விவரம் பின்வருமாறு
- வேலூர் - புதிய நீதிக் கட்சி - ஏ.சி.சண்முகம்
- பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சி - பாரிவேந்தர்
- சிவகங்கை - இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்
- தென்காசி - தமிழக முன்னேற்றக் கழகம் - ஜான்பாண்டியன்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும் தொகுதிகள்
- திருச்சிராப்பள்ளி
- தேனி
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி
- ஈரோடு
- ஸ்ரீபெரும்புதூர்
- தூத்துக்குடி
பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள்
- காஞ்சிபுரம்
- அரக்கோணம்
- தர்மபுரி
- ஆரணி
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- சேலம்
- திண்டுக்கல்
- மயிலாடுதுறை
- கடலூர்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு போட்டியிடும் தொகுதி
- இராமநாதபுரம்