உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் என்னென்ன ?
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்...
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் 5.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
அதன்படி, 1 லட்சத்து 37 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு புதுபிக்கத்தக்க எரிசக்தி துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதன் மூலமாக 18,420 மெகாவாட் மின் உற்பத்தி கூடுதலாக மேற்கொள்ளப்பட உள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் கூடுதலாக 6,180 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. மேலும் கோத்ரேஜ் நிறுவனத்தின் லைட் ஹவுஸ் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
குவால்காம் நிறுவனத்துடன் 177 கோடி ரூபாய் மதிப்பிலும், ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனத்துடன் 5,600 கோடி ரூபாய் மதிப்பிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதேபோல் தமிழ்நாட்டில் டாடா பவர் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் 55 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் உலகத் தொழிலாளர்கள் மாநாட்டில் காணொலி வாயிலாக ரிலையன்ஸ் அதிபர் அம்பானி கொண்ட நிலையில் அந்நிறுவனம் 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலீடு செய்ய உள்ளது.