For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#WeatherUpdate | தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! -வானிலை மையம் தகவல்!

06:29 PM Sep 10, 2024 IST | Web Editor
 weatherupdate   தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு   வானிலை மையம் தகவல்
Advertisement

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு நிலைகள் காரணமாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. தற்போதும் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

Advertisement

அடுத்த இரண்டு நாட்களில் ஆந்திராவின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏலூர், அல்லூரி சீதாராமராஜு (ஏஎஸ்ஆர்), பார்வதிபுரம் மான்யம், ஸ்ரீகாகுளம், விஜயநகரம், மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, என்டிஆர், கிருஷ்ணா ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது

அதே நேரத்தில் தமிழகத்தில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு மழை பொழிவு பெரிதாக இல்லை. கடந்த வாரம் இரவு நேரத்தில் சென்னையில் மழை வெளுத்து வாங்கிய நிலையில் தற்போது வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் மழை பெய்யாதா என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் மக்கள்.

இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் மழை குறித்த அப்டேட்டை வழங்கியுள்ளார்.  அதன்படி, தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சி, சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், கரூர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மழை பெய்யக்கூடும்.

Tags :
Advertisement