For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#WeatherUpdate | 19 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் மழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

02:36 PM Oct 24, 2024 IST | Web Editor
 weatherupdate   19 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் மழை    வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Advertisement

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இது மணிக்கு 18 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘டானா’ என பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஓருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, பெரம்பலூர், சேலம், நாமக்கல், தருமபுரி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 19 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement