Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்” - தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி

09:02 PM Mar 09, 2024 IST | Jeni
Advertisement

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி ஆகிய 40 தொகுதிகளிலும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற தேர்தல் நெருகியுள்ள நிலையில், நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக தீவிரமாக மேற்கொண்டு வந்தது.

அதன்படி ஏற்கனவே ஐயூஎம்எல், கொமதேக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, விசிக என அனைத்து கூட்டணி கட்சிகளுடனும் தொகுதி பங்கீடை இறுதி செய்தது. இதில் மக்கள் நீதி மய்யம் மக்களவை தேர்தலில் போட்டியிடாமல் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளும் எனவும், ஒரு மாநிலங்களவை தொகுதியை மட்டும் திமுக ஒதுக்கும் எனவும் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் இரண்டாம் கட்டமாக திமுக சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் திமுக சார்பில் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், திமுக தேர்தல் குழு தலைவர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எம்.பி திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், முன்னாள் மத்திய அமைச்சர் முகுல் வாஸ்னிக், காங். மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் காங். கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 9 தொகுதிகளிலும், புதுச்சேரி தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “புதுச்சேரி தொகுதி உட்பட 10 தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் 40 தொகுதியிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். காங்கிரஸ் எந்தெந்த தொகுதிகளில் களம் காண்கிறது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Tags :
ALLIANCECongressDMKElection2024Elections2024INCIndiaselvaperunthagaiTNCC
Advertisement
Next Article