For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை காக்க உறுதியேற்போம்" - தவெக தலைவர் விஜய்

இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை காக்க உறுதியேற்போம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
02:22 PM Nov 26, 2025 IST | Web Editor
இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை காக்க உறுதியேற்போம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
 இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை காக்க உறுதியேற்போம்    தவெக தலைவர் விஜய்
Advertisement

ஆங்கிலேயர்களிடம் இருந்து 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி நாடு விடுதலை பெற்ற பிறகு இந்தியாவுக்கு என தனி அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. இதனை டாக்டர் அம்பேத்கர் உருவாக்கினார். அவர் வரைந்த அரசியலமைப்பு சட்டங்கள், பாபு ராஜேந்திர பிரசாத் தலைமையிலான அரசியலமைப்பு நிர்ணய சபையால் 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த தினத்தை அரசியலமைப்பு தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம்.

Advertisement

இந்த நிலையில், இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

"நம் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான குழு, உலகத்திலேயே மிகச் சிறந்த அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றி நமக்கு அளித்துள்ளது. இதில் இறையாண்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. பல்வேறு மொழி, இனம், கலாசாரங்களுக்கு ஒத்த மதிப்பு அளித்து, மதச்சார்பின்மை காத்துள்ளது.

https://x.com/TVKVijayHQ/status/1993568297812705645

பூரண ஜனநாயகத்துடன் வேற்றுமையில் ஒற்றுமை காண வழி வகை செய்துள்ளது. அண்ணலின் அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்ட தினத்தை இந்திய அரசியல் சாசன தினமாகக் கொண்டாடுகிறோம். இந்த நாளில், இந்திய அரசியலமைப்பின் மாண்பையும் அது நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும் காக்க உறுதியேற்போம்"

இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement