For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குடியுரிமை திருத்த சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் - ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசு உறுதி!

01:31 PM Feb 12, 2024 IST | Web Editor
குடியுரிமை திருத்த சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்   ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசு உறுதி
Advertisement

சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்று ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்கமால் 2 நிமிடங்களில் புறக்கணித்தார். உரையில் உள்ள பல அம்சங்களில் முரண்படுவதாக தெரிவித்த அவர், வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய் பாரத் என கூறி 2 நிமிடங்களில் தனது உரையை முடித்துக் கொண்டார். ஆளுநர் படிக்காத உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். 

அந்த உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

  • தமிழ்நாட்டின் பொருளாதாரம் 8.19% உயர்ந்துள்ளது. மேலும் பணவீக்கம் 5.97% ஆக உள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு திறம்பட செயல்படுகிறது.
  • 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழ்நாடு அரசு ஈர்த்துள்ளது.
  • மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்ட மக்களுக்கு தலா 6000 ரூபாய் வீதம் ரூ.1487 கோடி அளவுக்கு உதவிகள் வழங்கியுள்ளோம்.
  • நமது மாநிலம் பல பேரழிவுகளை சந்தித்த போதிலும், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றம் ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க சாதனையை அடைந்துள்ளது.
  • நிதி நெருக்கடிக்கு இடையே சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்ட பணிகளுக்கு தனது பங்களிப்பைவழங்குவதாக உறுதியளித்த மத்திய அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
  • சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்.
  • ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தும் என நம்புகிறோம்.
  • குற்றங்களைத் தடுப்பதில் அரசு சமரசமின்றி செயல்பட்டு வருகிறது. பெண்கள் முன்னேற்றத்துக்கும், சமூக நீதியை நிலைநாட்டுவதற்கும் சமரசமின்றி செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு அரசு.
  • சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை (சி.ஏ.ஏ.) ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.
  • உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது 14.54 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ₹6.64 லட்சம் கோடி முதலீடுகள் செய்தவதற்கு நிறுவங்களுடன் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
  • புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34% அதிகரித்துள்ளது.
  • 10 லட்சம் இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த திறன்களை வழங்கிடும் உயரிய நோக்கத்துடன் தொலைநோக்குப் பார்வை கொண்ட ’நான் முதல்வன்' திட்டத்தை முதலமைச்சர் தொடங்கினார்.
  • கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் விளைவாகக் பேருந்துகளில் பெண்கள் பயணிப்பது 40% இருந்து 65% ஆக உயர்ந்து பெண்கள் எளிதாக பயனம் செய்யவும் முன்னேறவும் வழி பிறந்துள்ளது. 
  • கோயில்கள் மற்றும் அறநிலையங்களுக்குச் சொந்தமான 5,579 கோடி ரூபாய் மதிப்புள்ள 6,071 ஏக்கர் நிலங்களை இந்த அரசு ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்துள்ளது.
  • மொத்தம் 1,290 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. 
Tags :
Advertisement