For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தலைவருடன் ஆலோசித்து நிலைப்பாட்டை கூறுவோம்” - புஸ்ஸி ஆனந்த்!

05:12 PM Jun 16, 2024 IST | Web Editor
“நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தலைவருடன் ஆலோசித்து நிலைப்பாட்டை கூறுவோம்”   புஸ்ஸி ஆனந்த்
Advertisement

“நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து தலைவருடன் ஆலோசித்து அதற்கான நிலைப்பாட்ட கூறுவோம்” என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை மதுக்கரையில் தமிழக வெற்றிக் கழத்தின் கோவை தெற்கு மாவட்ட தலைவர் விக்னேஷின் இல்ல காதணி விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நடமாடும் விலையில்லா விருந்தக வாகனத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடரந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

தவெக தலைவர் விஜய் விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம்' - புஸ்ஸி ஆனந்த் தகவல்! - News7 Tamil“திருவள்ளூர் மாவட்டத்தில் ஏழு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளோம். கோவை தெற்கு
மாவட்டத்தில் இரண்டு வீடுகள் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறோம். நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து எங்கள் தலைவருடன் கலந்தாலோசித்து அதற்குண்டான நிலைப்பாட்டை தெளிவாக கூறுவோம்.  தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டுக்கு இடத்தை நாங்கள் தேர்வு செய்து கொண்டிருக்கிறோம்.

இடத்தை தேர்வு செய்த பிறகு எங்கள் தலைவர் இறுதி முடிவை அறிவிப்பார். மிக விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement