Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தூய்மைப் பணியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" - செல்வப்பெருந்தகை!

02:50 PM Aug 14, 2025 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "நேற்று இரவு தூய்மைப் பணியாளர்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் அப்புறப்படுத்தியிருப்பது வேதனையளிக்கிறது. நீதிமன்றம் கூறினாலும் கூட காவல்துறை தாயுள்ளத்தோடு அணுகியிருக்க வேண்டும்.

Advertisement

தூய்மைப் பணியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

கடைக்கோடி பணியில் இருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவுக் கரம் அளித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவும், கைது செய்யப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களையும், அவர்களுக்காக போராடிய ஜனநாயக சக்திகளையும் விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் இப்பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டுகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ChennaiCMMKStalinSelvapperundhakaiTamilNaduTNGovernmentWorkers
Advertisement
Next Article