Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“தற்காலிகமாக தாக்குதலை நிறுத்தியுள்ளோம்... எங்கள் படைகள் தயாராக உள்ளன” - பாகிஸ்தானை எச்சரித்த பிரதமர் மோடி!

தற்காலிகமாக தாக்குதலை நிறுத்தியுள்ளதாகவும் எங்கள் படைகள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்து பிரதமர் மோடி பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.
09:00 PM May 12, 2025 IST | Web Editor
தற்காலிகமாக தாக்குதலை நிறுத்தியுள்ளதாகவும் எங்கள் படைகள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்து பிரதமர் மோடி பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.
Advertisement

இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த போர் பதற்றம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களியைடே இன்று உரையாற்றினார்.

Advertisement

அவர் கூறியதாவது, “நாட்டு மக்களுக்கு வணக்கம். முதலில் நமது முப்படைக்களுக்கும், உளவுத்துறை என அனைத்து அமைப்புகளுக்கும் நாட்டு மக்கள் சார்பாக சல்யூட். இந்த நடவடிக்கை என்பது நாட்டு மக்களின் ஒவ்வொருவருக்கும் நான் சமர்ப்பித்துக் கொள்கிறேன். இந்த இக்கட்டான காலத்தில் நமது ஒற்றுமையும் அமைதியும் காண முடிந்தது. நமது வீரர்கள் சித்தூர் ஆப்பரேஷனை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

பஹல்காம் தாக்குதல் என்னை தனிப்பட்ட முறையில் மிகவும் பாதித்தது. பயங்கரவாத நடவடிக்கைக்கு எதிராக நாடே ஒன்றுபட்டு நின்றது. அதை தடுக்க நமது படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டது. ஆப்ரேஷன் சித்தூர் என்பது ஒரு பெயர் அல்ல, உணர்வுபூர்வமான நடவடிக்கை. மே 7ஆம் தேதி நாம் எவ்வாறு நடவடிக்கை எடுத்தோம் என்பதை உலகமே பார்த்துக் கொண்டிருந்தது.

நாம் பாகிஸ்தானின் ஒவ்வொரு தீவிரவாத கட்டமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தினோம். அவர்களை மண்ணை கவ்வ செய்தோம். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் நம்மை தாக்கின. அதில் பாபல்பூர்,முரித்கே ஆகிய பகுதிகள் அடங்கும். நாம் பயங்கரவாதிகளின் தலைமையகத்தை தகர்த்தோம் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்றுள்ளோம். நாம் ஒரே தாக்குதலில் பயங்கரவாத தலைவர்களை கொன்றுள்ளோம். பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாடி வருகிறார்கள்.

நம் தாக்குதலை சமாளிக்க முடியாத பாகிஸ்தான், நம் குடியிருப்புகள், பள்ளிகள் கோயில்கள், குரு துவாராகள், ஆலயங்கள் ஆகியவற்றை ட்ரோன்களை கொண்டு தாக்கம் முற்பட்டபோது நாம் அதனை முறியடித்தோம். பாகிஸ்தானின் ஏவுகணைகள் ட்ரோன்கள் சீட்டு கட்டு போல் தொடர்ச்சியாக கீழே வீழ்த்தியதை பார்க்க முடிந்தது. பாகிஸ்தானின் உண்மை முகம் என்ன என்பதை உலக அரங்கில் நாம் தெரியப்படுத்தி உள்ளோம்.

நம்முடைய ஏவுகணைகள் பாகிஸ்தானின் ராணுவ மற்றும் விமான தளங்களை தாக்கி அழித்தன. பாகிஸ்தானின் இதயத்தை நாம் தாக்கினோம். நம் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தானே உலக அரங்கில் அழுதது. எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்று சர்வதேச அளவில் உதவி கேட்டது. நாம் ஏற்கெனவே ஆபரேஷன் சிந்துர் மூலம் பாகிஸ்தானின் தீவிரவாத கட்டமைப்புகளை தகர்த்துள்ளோம்.

தற்போது தற்காலிகமாக தான் பாகிஸ்தானுக்கு எதிரான விமானப்படை தாக்குதலை நிறுத்தியுள்ளோம். பாகிஸ்தானின் எதிர்கால நடவடிக்கையை எவ்வாறு உள்ளது என்பதை கணிக்கவே இந்த தாக்குதல்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒன்று மட்டும் கூற விரும்புகிறேன் எங்களுடைய படைகள் எப்போதுமே தயாராக இருக்கின்றன.

பாகிஸ்தான் அணு ஆயுத பூச்சாண்டி காட்டுவது இந்தியாவிடம் செல்லுபடி ஆகாது. எந்த வகையான பயங்கரவாத நடவடிக்கைபாகிஸ்தான் எடுத்தாலும் அதற்கு தக்க வகையில் பதிலடியை திரும்ப கொடுப்போம். பயங்கரவாதிகளும் அவர்களுக்கு உதவி புரிபவர்களும், பின்புலமாக உள்ளவர்களும் எங்களுக்கு ஒன்றுதான். ஆப்ரேஷன் சிந்தூர் ஒரு புது சகாப்தத்தை எழுதியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து போர்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். அவர்களை வீழ்த்தியுள்ளோம்.

தற்போது காலம் மாறிவிட்டது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் காலமாகும் இது. ஆனால், இது போருக்கான காலம் அல்ல. அதே வேளையில் பயங்கரவாத செயல்களுக்கான காலம் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பயங்கரவாத நடவடிக்கைகளும் அமைதியும் அமைதி பேச்சுவார்த்தையும் ஒருசேர நடத்த முடியாது. பயங்கரவாத நடவடிக்கையும் வாணிபத்தை ஒரு சேர செய்ய முடியாது.

பாகிஸ்தான் அரசும் பாகிஸ்தான் ராணுவம் தான் பயங்கரவாதத்தை வளர்த்து வருகிறது. எனவே தண்ணீரும் ரத்தமும் ஒருசேர ஓட முடியாது. அமைதி வழியில் நடப்பதே ஒரு சக்திதான். பாகிஸ்தானிடம் பயங்கரவாதத்தை தடுப்பது மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்டவை குறித்து மட்டுமே பேச்சு வார்த்தை நடத்துவோம். இந்தியா தனது பலத்தை தற்போது காண்பித்து இருக்கிறது”

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags :
BJPIndiaPahalgam AttackpakistanPMModiWar Tension
Advertisement
Next Article