For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"அனைத்து வீடுகளுக்கும் அரசின் திட்டங்கள் ஏதோ ஒரு வகையில் சென்றடைய வேண்டும் என பணியாற்றி வருகிறோம்" - தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

12:20 PM Jul 11, 2024 IST | Web Editor
 அனைத்து வீடுகளுக்கும் அரசின் திட்டங்கள் ஏதோ ஒரு வகையில்  சென்றடைய வேண்டும் என பணியாற்றி வருகிறோம்    தருமபுரியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேச்சு
Advertisement

அனைத்து வீடுகளுக்கும் அரசின் திட்டங்கள் ஏதோ ஒரு வகையில் சென்றடைய பணியாற்றி வருகிறோம் என தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

மக்களுடன் முதல்வர் திட்டம் ஏற்கெனவே நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் வெற்றியைத் தொடர்ந்து, ஊரகப் பகுதிகளிலுள்ள உள்ளாட்சிகளிலும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இத்திட்டம் தற்போது ஊரகப் பகுதியில் உள்ள மக்களுக்காக விரிவுபடுத்தப்பட்டு இன்று முதல் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் தொடக்க விழா தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஊரகப் பகுதியில் 'மக்களுடன் முதல்வர்'  திட்டத்தைத் தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார்.  இதனைத் தொடர்ந்து ஏற்கெனவே முடிக்கப்பட்ட ரூ. 444.77 கோடி மதிப்பீட்டில் 621 முடிவுற்ற திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.


இதனைத் தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது..

“ முதலமைச்சரின் தனிப்பிரிவு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறோம். மக்கள் கொடுக்கும் எல்லா மனுக்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தோம்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று நான் மக்களை சந்தித்தேன். அதற்கு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என பெயர் வைத்தேன். கொளத்தூர் தொகுதி மட்டும் இல்லை, எல்லா தொகுதிகளும் என் தொகுதி தான் என மனு வாங்கினேன். ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் அதை நிறைவேற்றுவேன் என , மேடையிலே பெட்டியை பூட்டி எடுத்து சென்றேன். ஆனால் எதிர்கட்சிகள் ஆட்சிக்கே வரப் போவதில்லை, நிறைவேற்றப்ப போவதில்லை என கேலி செய்தார்கள்.

ஆனால் என் மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெற வைத்தீர்கள். ஆட்சிக்கு வந்தவுடன் 2 லட்சத்து 212 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது‌. தேர்தல் முடிந்தவுடன் எங்கள் கடமை முடிந்தது என எண்ணாமல், இனிமேல் தான் கடமை தொடங்குகிறது என நினைத்து வேலை செய்தோம்.

இதில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதலமைச்சரின் தனிப்பிரிவு, மக்களுடன் முதல்வர், முதல்வரின் முகவரி என பலப்பிரிவுகளில் மனுக்களை வாங்கி, தனி அலுவலர் வைத்து நிறைவேற்றி வருகிறோம். எல்லா பிரிவுகளின் கீழ் வாங்கும் மனுக்கள் ஒரு குடையில் கீழ் கொண்டு வரப்படுகிறது. முதல்வரின் முகவரி திட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் 72 ஆயிரம்மனுக்கள் பெறப்பட்டது.

அரூர் அரசு மருத்துவமனை ரூ.51 கோடி மதிப்பில் உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படும். பஞ்சப்பள்ளி-அலியாளம் அணைக்கட்டு திட்டம் நிறைவேற்றப்படும். அரூர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். சிட்லிங், சித்தேரி மலை கிராமமக்களுக்காக சிறு தானிய மதிப்பு கூட்டப்பட்ட தொழில்கள் ஏற்படுத்தப்படும். தீர்த்தமலையில் துணை வேளாண் விரிவாக்க மையம் அமைக்கப்படும் .

சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் இது தான் திராவிட மாடல் அரசு. எல்லா வீட்டிற்கும் ஏதோ ஒரு வகையில் அரசின் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என பணியாற்றி வருகிறோம்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags :
Advertisement