Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"மொட்டை மாடியில இருக்கோம்... எங்கள காப்பாத்துங்க.." - வீடியோ வெளியிட்டு உதவி கேட்ட தூத்துக்குடி பெண்.!

05:10 PM Dec 18, 2023 IST | Web Editor
Advertisement

" மொட்டை மாடியில இருக்கோம்... எங்கள காப்பாத்துங்க.." என மொட்டை மாடியிலிருந்து பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டு உதவி கேட்ட செய்திகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

Advertisement

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.  இதனால் திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மழைநீர் தேக்கம் மற்றும் அதி கனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.  பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்: தொடர் கனமழை | தென் மாவட்டங்களில் உதவிகள் கோர வாட்ஸ்ஆப் எண் அறிவிப்பு!

திருநெல்வேலியில் பேருந்து நிலையத்தில் இருந்து சிந்துபூந்துறை செல்லும் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் 100 % வெள்ள நீர் ஊருக்குள் வரும் என்பதால் தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற அதிகாரிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டார். மேலும் அரசு வாகனங்களைக் கொண்டு ஊர் மக்களை 100 % அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.


இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவில் கேம்லலாபாத் எனும் ஊரில் மழை நீர் புகுந்து வீடுகளை மூழ்கடிக்கும் அளவுக்கு தண்ணீர் புகுந்துள்ளதால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியைச் சார்ந்த பெண் ஒருவர் மொட்டை மாடியில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தாங்கள் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும், தங்களை பிறரையும் காப்பாற்ற உதவுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags :
FloodNellaiRainrain alertSouth DistrictSouth FloodTuticorin
Advertisement
Next Article