Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”திமுக  கூட்டணி வலுவாக இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை” - செல்லூர் ராஜூ பேட்டி!

திமுக  கூட்டணி வலுவாக இல்லை என்று நாங்கள் சொல்லவில்லையே என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
12:50 PM Jun 16, 2025 IST | Web Editor
திமுக  கூட்டணி வலுவாக இல்லை என்று நாங்கள் சொல்லவில்லையே என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Advertisement

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார
நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான பூமி
பூஜையை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசியவர்,   ”அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற சம்பவங்களுக்கு எங்கள் முதலமைச்சர் முறையாகநடவடிக்கை எடுத்து சிபிஐக்கு உத்தரவிட்டார்.

Advertisement

பொள்ளாச்சி வழக்கில் சிபிஐக்கு உத்தரவிட்டு "யார் அந்த சார்" என்பதை எங்கள்
ஆட்சியில் கண்டுபிடித்து தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளோம். திமுக அரசாங்கம் எந்த ஒரு சம்பவத்திற்கும் உத்தரவிடுவது கிடையாது. திமுக தான் யார் அந்த சார் என்பதை சொல்ல மறுக்கின்றனர்.

இந்து முன்னணி நடத்தும் முருகன் மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டால் நாங்கள்பங்கேற்போம். திருமாவளவன் - வைகைச் செல்வம் சந்திப்பு ஒரு அரசியல் பண்பாடு. திமுக கூட்டணி வலுவாக இல்லை என்று யார் சொல்கிறார்கள்? கூட்டணி வலுவாக இல்லை என்று நாங்கள் சொல்லவில்லையே.

முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு செல்வாக்கு உள்ளது. சாலையில் சென்றால் கூட்டம் கூடுகிறது. அப்படி இருக்கும்போது எங்கள் கூட்டணி
வலுவாக உள்ளது என்று ஏன் சொல்ல வேண்டும். அவங்களுக்கு பயம் இருப்பதால் தான் சொல்கிறார்கள். என்ன கூட்டணி இருந்தாலும் மக்கள் தான் எஜமானர்கள்.
அதிமுக தலைமையில் தான் ஆட்சி என்று அமித்ஷா, நயினார் நாகேந்திரன்
சொல்லிவிட்டார்கள்.

விஜய், அதிமுக உங்கள் கூட்டணிக்கு வராதது வருத்தமளிக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்தவர், மக்கள் தான் கூட்டணி, மக்களோடு கூட்டணி தான் நாங்கள் வைத்துள்ளோம். தேர்தல் நெருங்கும் போது தான் சொல்ல முடியும்.
அமைச்சர் மூர்த்தி அவருடைய பாக்கெட்டில் இருந்தா கொடுக்கிறார். மேற்கு தொகுதி மக்கள் இதன் மூலம் பயன்டைகிறார்கள் தானே? சின்ன கேரியர் கொடுப்பதாக சொல்கிறார்கள். பெரிய ஹாட் பாக்ஸ் ஆக கொடுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
ADMKamithshaCMDMKElectionEPSMaduraiMKStalinSellur rajuudhayanithivijay
Advertisement
Next Article