Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நிலச்சரிவுப் பகுதிகளில் விஞ்ஞானிகள், நிபுணர்களுக்கு தடையா? உண்மை என்ன?

11:35 AM Aug 02, 2024 IST | Web Editor
Advertisement

வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு செல்ல விஞ்ஞானிகளுக்கு தடை விதித்துள்ளதாக கூறும் செய்தி தவறானது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

Advertisement

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 318 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கிய 1000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 4வது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனிடையே ராணுவம் மற்றும் மீட்புக் குழுவினரோடு இஸ்ரோவும் தேடுதல் பணியில் இணைந்துள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில், RISAT SAR தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படமாக எடுத்து அதன் முழு தகவல்களையும் ராணுவத்திற்கு வழங்கி வருகிறது இஸ்ரோ.

இந்த நிலையில் நேற்று கேரள அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, நிலச்சரிவு குறித்த கருத்துகள் மற்றும் ஆய்வு அறிக்கைகளை விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் ஊடகங்களுடன் பகிர்வதில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் எனவும், மேலும் பேரிடர் பாதிக்கப்பட்ட இடங்களில் ஏதேனும் ஆய்வு செய்ய வேண்டும் எனில் கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முன் அனுமதியை பெற வேண்டும் எனவும் கூறியது.

வதந்திகள் பரவுவதை தடுப்பதற்கும், நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காகவும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் இந்த செய்தி பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வர வேண்டாம் எனவும், தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்றும் அறிவியல் நிறுவனங்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு எஸ்டிஎம்ஏ உத்தரவிட்டதாக பரவியது. இதனையடுத்து இந்த உத்தரவிற்கு பாஜகவிலிருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியது. நிலச்சரிவு தொடர்பான விவரங்களை மறைக்க கேரள அரசு முயல்வதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து, வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை விஞ்ஞானிகள் ஆய்வுசெய்ய வேண்டாம் என உத்தரவிட்டதாக பரவும் செய்தி தவறானது என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கேரள தலைமை செயலாளர், “மாநில அறிவியல் ஆய்வுகள் மற்றும் நுண்ணறிவுகளை வழங்குவதைத் தடுக்கும் நோக்கத்துடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. தவறான தகவல் பரவுவதை தடுக்கவும், மீட்பு நடவடிக்கையில் பிரச்சனை ஏற்படுவதை தடுக்க தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது” என தெரிவித்துார்.

Tags :
BJPISROKerala GovernmentPinarayi VijayanSDMAWayanad Landslide
Advertisement
Next Article