For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வயநாடு நிலச்சரிவு - உயிரிழப்பு எண்ணிக்கை 19ஆக உயர்வு!

09:23 AM Jul 30, 2024 IST | Web Editor
வயநாடு நிலச்சரிவு   உயிரிழப்பு எண்ணிக்கை 19ஆக உயர்வு
Advertisement

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர்  எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

 நேற்று காலை முதலே கனமழை பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில், முண்டகையில் நள்ளிரவு 1 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலையில் பெரிய அளவிலான 2வது நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மீட்புக் குழுவினர் அப்பகுதிகளில் மீட்டுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

விரைவில் இரு ஹெலிகாப்டர் மீட்பு பணியில் ஈடுபடுகின்றனர். முண்டகை மற்றும் அட்ட மலை செல்ல வடம் பயன்படுத்தி தற்காலிக பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு பெங்களூர் உட்பட பிற பகுதிகளில் இருந்து நான்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வயநாடு விரைந்துள்ளதாகவும் வருவாய் துறை அமைச்சர் கே ராஜன் தெரிவித்துள்ளார்.

வயநாடு நிலச்சரிவு குறித்து கேரள முதலமைச்சர் பினராய் விஜயனுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் விவரங்களை கேட்டறிந்துள்ளனர்.

Tags :
Advertisement