வயநாடு நிலச்சரிவு : 289-ஐ கடந்த உயிரிழப்புகள்!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 289-ஆக உயர்ந்துள்ளது.
கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே பருவமழை பெய்து வருகிறது. இதனிடையே கடந்த வாரத்திலிருந்து இந்த பருவமழை தீவிரமடைந்தது. இதனால் தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், தென் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வந்தது.
இதனைத்தொடர்ந்து பெய்த கனமழையால் வயநாட்டின் முண்டகை மற்றும் சூரல்மலையில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் முதல் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள் :“உள்ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது” – மமக தலைவர் ஜவாஹிருல்லா!
தற்போது வரை கிட்டதட்ட 289-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நிலச்சரிவு பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று வயநாட்டிற்கு சென்றார். நிலச்சரிவில் குடும்பத்தினரை இழந்து தவிப்பவர்களையும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.