‘ஏஸ்’ விஜய் சேதுபதி வெற்றி பெற்றாரா? - திரை விமர்சனம்!
மலேசியாவுக்கு வேலைக்கு போகும் விஜய்சேதுபதி , பில்டப் பார்ட்டி யோகிபாபு ரூம் மேட் ஆகிறார். அப்போது எதிர் வீட்டில் இருக்கும் ஹீரோயின் ருக்மினிவசந்த்தை காதலிக்கிறார். காதலி கடனை அடைக்க சூதாட்டம் ஆடுகிறார். பேங்க் பணத்தை கொள்ளையடிக்கிறார்.வில்லன், போலீஸ் டீம் துரத்த, அவரும், யோகிபாபும் மாட்டினார்களா? என்ன நடந்தது என்பது ஆறுமுககுமார் இயக்கிய ஏஸ் படத்தின் கதை.
ஆரம்பம் முதல் கடைசிவரை காமெடி, ஆக்ஷன் என அனைத்து காட்சிகளிலும் கலக்கி இருக்கிறார் விஜய்சேதுபதி. ஹீரோ ரூம்மெட் ஆக வரும் யோகிபாபு படம் முழுக்க, ஹீரோவுடன் வருகிறார். விஜய்சேதுபதி மற்றும் யோகிபாபுவின் காம்போ, காமெடியில் செட்டாகி இருக்கிறது. யோகிபாபுவின் அப்பாவிதமான சேட்டைகள் ரசிக்க வைக்கின்றன.
யதார்த்தமான நடிப்பு, ரொமான்ஸ், ஆக்ஷன் ஆகியவற்றால் படத்தை தாங்கி பிடிக்கிறார் விஜய்சேதுபதி. சூதாட்ட காட்சிகள், சேசிங், பணம் கொள்ளடிக்கும் காட்சிகளில் முத்திரை பதித்து இருக்கிறார்.போல்டு கண்ணன் என்ற பெயருக்கு அவர் சொல்லும் விளக்கம் அருமை. ருக்மினி வசந்த் நடிப்பு க்யூட்டாக நடித்துள்ளார்.
வில்லனாக வரும் அவினாஷ், வில்லத்தனமான வேடத்தில் வரும் பப்லு, முக்கியமான கேரக்டரில் வரும் திவ்யாவும் மனதில் நிற்கிறார்கள். சாம் சி.எஸ் பின்னணி இசை, ஜஸ்டின் பிரபாகர் பாடல்கள் ஓகே. ஏஸ் படத்தின் முழு கதையும் மலேசியாவில் நடக்கிறது. கிரண் கேமரா அதை அழகாக காண்பிக்கிறது. குறிப்பாக சேசிங், பைட் காட்சிகளில் அவர் புகுந்து விளையாடி இருக்கிறது.
படத்தின் நீளம் மைனஸ் ஆக இருக்கிறது. இன்னும் காமெடியை சீர்படுத்தி இருக்கலாம். முதற்பாதியை விட பிற்பாதி வேகமாக இருக்கிறது. சில குறைகள் இருந்தாலும் கமர்ஷியலாக படம் நகர்வதும், திரைக்கதை விறுவிறுப்பும், திருப்பங்களும், பணம், சூதாட்டம், ஹீரோ, வில்லன் சம்பந்தப்பட்ட மோதல் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன.
- மீனாட்சி சுந்தரம், சிறப்பு செய்தியாளர்.