எதாவது ஒரு வன்முறை சம்பவம் நடந்ததா? - 'எம்புரான்' படத்திற்கு தடை விதிக்க கோரிய பாஜக நிர்வாகிக்கு நீதிபதி கேள்வி!
மலையாள நடிகர்கள் பிரித்விராஜ் - மோகன்லால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் ‘லூசிஃபர்’. இப்படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பால் `எல்2; எம்புரான்’ என்ற தலைப்பில் படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. இதில் பிரித்விராஜ் மற்றும் மோகன்லாலுடன் மஞ்சு வாரியர், பிரித்விராஜ், டோவினோ தாமஸ், ஷிவதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கடந்த 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான இப்படம் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. படத்தில் 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இருப்பதாக கூறி சமூக வலைத் தளங்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மோகன்லால் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக கூறி மன்னிப்பு கோரி இருந்தார். நீக்கப்பட்ட படத்தின் பதிப்பு இன்று வெளியாவதாக தகவல் வெளியானது.
இந்த சூழலில் 'எல் 2 எம்புரான்' படம் வகுப்புவாத வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாக குற்றம் சாட்டி படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் அவர் தொடர்ந்து வழக்கு மீதான விசாரணை இன்று(ஏப்ரல்High Court of Kerala நடைபெற்றது.
அப்போது நீதிபதி “ஒரு வாரமாக ஓடும் இந்தப் படத்தால் தூண்டப்பட்ட எதாவது ஒரு வன்முறை சம்பவம் நடந்தது என்று சுட்டிக்காட்ட முடியுமா? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர் அப்படி ஏதும் வழக்குகள் பதிவாகவில்லை என தெரிவித்துள்ளார். பின்பு பாஜக நிர்வாகியிடம், இது விளம்பரத்திற்காக போடப்பட்டுள்ள மனு என கண்டித்ததுடன், கோடை விடுமுறைக்குப் பின் வழக்கு விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.