This News Fact Checked by ‘Boom’
பிப்ரவரி 8, 2025 அன்று பாகிஸ்தானில் நடந்த முத்தரப்பு தொடர் போட்டியின் போது நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ரச்சின் ரவீந்திர காயமடைந்தார். பின்னர், அவர் லாகூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு அவரது ஐபோன் திருடப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தக் கூற்று தவறானது என்று கண்டறியப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும், அவரது கைப்பேசி திருடப்பட்ட செய்தியும் தவறானது என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஊடக மேலாளர் வில்லி நிக்கோல்ஸ் தெரிவித்தார்.
ஃபேஸ்புக்கில் ஒரு பயனர் ரவீந்திர ரச்சினின் புகைப்படத்தை பகிர்ந்து, 'ரச்சின் ரவீந்திராவின் ஐபோன் லாகூர் மருத்துவமனையில் திருடப்பட்டது, அங்கு அவர் காயமடைந்து அனுமதிக்கப்பட்டார். [PKT செய்திகள்]' என்று பகிரப்பட்டுள்ளது.
இதே பதிவு த்ரெட்கள் போன்ற பிற சமூக ஊடக தளங்களிலும் வைரலாகப் பரவி வருகிறது.
https://www.threads.net/@sarfaraz_khan3398/post/DGPeb_iS_RN?xmt=AQGziR5zfV6kNrP3Ru4yJKYWNvgW6Ssj63D0TL5oolG9vpo
உண்மைச் சரிபார்ப்பு:
இந்த கூற்றை சரிபார்க்க முதலில் ஊடக அறிக்கைகளைச் சரிபார்த்த போது, அந்தக் கூற்றை உறுதிப்படுத்தும் நம்பகமான செய்தி அறிக்கை எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.
சமூக ஊடகங்களில் வைரலாகும் கூற்று 'PKT News' என்ற ஊடக நிறுவனத்தைக் குறிப்பிடுகிறது. அதை ஆராய்ந்தபோது, அதேபெயரில் பாகிஸ்தானில் எந்த அதிகாரப்பூர்வ ஊடக நிறுவனமும் இல்லை என தெரியவந்தது. தேசிய மற்றும் சர்வதேச செய்திகளை உள்ளடக்கிய 'நியூஸ் பாகிஸ்தான் டிவி' மற்றும் ‘பாகிஸ்தான் டுடே’ போன்ற ஊடக நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவில், 'PTC News' என்ற பெயரில் ஒரு பெரிய பஞ்சாபி செய்தி சேனலும் உள்ளது.
இதுகுறித்து மேலும் விசாரித்தபோது, இந்த தவறான கூற்று முதன்முதலில் பிப்ரவரி 17, 2025 அன்று முஃபாத்லா பகடி என்ற ட்விட்டர் கணக்கிலிருந்து உருவாக்கப்பட்டது என கண்டறியப்பட்டது.
இந்த கணக்கு பிரபல கிரிக்கெட் ஆய்வாளர் முஃபாதல் வோராவின் பெயரில் உருவாக்கப்பட்ட ஒரு போலி கணக்கு.
பகடி கணக்குகள் என்பது நகைச்சுவை, நையாண்டி அல்லது பொழுதுபோக்கு நோக்கத்திற்காக ஒரு பிரபலமான நபர், பிராண்ட் அல்லது அமைப்பின் பெயரில் உருவாக்கப்படும் போலி கணக்குகள் ஆகும்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஊடக மேலாளர் வில்லி நிக்கோல்ஸ் இந்த வைரல் கூற்றை மறுத்தார்.
இதுகுறித்து மேலும் தெளிவுபடுத்திய வில்லி நிக்கோல்ஸையும் தொடர்பு கொண்டதில், இந்தக் கூற்று தவறானது என்று அவர் தெரிவித்தார்.
"ராச்சின் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. அவரது தொலைபேசி திருடப்பட்டதாக வெளியான செய்தியும் தவறானது" என்று வில்லி நிக்கோல்ஸ் தெரிவித்தார்.
Note : This story was originally published by ‘Boom’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.