திகார் சிறையில் கெஜ்ரிவாலுக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததா? - #DelhiCM அதிஷி பெயரில் பரவும் ட்வீட் உண்மையா?
This News Fact Checked by ‘Factly’
திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாக டெல்லி முதல்வர் அதிஷி மர்லினாவின் பெயரில் பதிவுகள் வைரலானது. இதுகுறித்து உண்மை சரிபார்ப்பு ஆய்வுகளை விரிவாக காணலாம்.
டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக இருந்த அரவிந்த கெஜ்ரிவால் மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தற்போது பிணையில் உள்ளார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த கெஜ்ரிவால் கல்வி அமைச்சராக இருந்த அதிஷியை முதலமைச்சராக அறிவித்தார். தற்போது அதிஷி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த வருடம் டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் சமூக ஊடகங்களில் வைரலாகி சில பதிவுகள் வைரலாகி வருகிறது. இப்பதிவில் தற்போதைய டெல்லி முதலமைச்சரான அதிஷி மர்லினாவின் எக்ஸ் தளத்தில் பதிவு செய்யப்பட்ட பதிவின் ஸ்கிரீன் ஷாட் இடம்பெற்றுள்ளது. மேலும் திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாலியல் வன்கொடுமைகள் செய்யப்பட்டதாகவும், எனவே இதற்கு வருகிற தேர்தலில் பாரதிய ஜனதாவை தோற்கடித்து டெல்லி மக்கள் பதிலடி கொடுப்பார்கள் எனவும் அப்பதிவில் குறிப்பிட்டிருந்தது.
உண்மை சரிபார்ப்பு :
சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கிய தகவல்கள் குறித்து பேக்ட்லி உண்மை சரிபார்ப்புக்கு உட்படுத்தியது. இதன்படி டெல்லி முதல்வர் அதிஷி மர்லினாவின் அதிகாரப்பூர்வ X பக்கத்தை சரிபார்த்த போது அதில் அத்தகைய பதிவு துவும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. ஆனால் அதிஷி மர்லினாவின் பெயரில் இயங்கும் போலிக் கணக்க்கின் மூலம் இந்த வைரல்
ட்வீட் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ட்வீட்டின் ஸ்கிரீன் ஷாட்டை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தியபோது அது அதிஷி பெயரில் இயங்கும் போலிக் கணக்கில் பதிவு செய்யப்பட்ட ட்வீட்டை காண்பித்தது. மேலும் இந்த எக்ஸ் தளத்தின் பயோவில் இது ஒரு ரசிகர் பக்கம் எனவும் இதில் பதிவு செய்யப்படும் பதிவுகள் நகைச்சுவை மற்றும் விளையாட்டுக்காக மட்டுமே எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வைரலான பதிவில் இடம்பெற்ற படம், 06 பிப்ரவரி 2023 அன்று, MCD கூட்டத்தில் மூன்றாவது முறையாக மேயரைத் தேர்ந்தெடுக்காமல் ஒத்திவைக்கப்பட்ட பிறகு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் தெளிவாக உறுதியாகிறது.
முடிவு :
டெல்லி முதல்வர் அதிஷி மர்லினா பெயரில் செயல்படும் மாதிரி கணக்கிலிருந்து வைரலான ட்வீட் வெளியிடப்பட்டுள்ளது. இதன் எக்ஸ் கணக்கின் பயோ நகைச்சுவை மற்றும் நையாண்டி செய்திகள் என்று தெளிவுபடுத்தியது. அதிஷி மர்லினாவின் அதிகாரப்பூர்வ X தளத்தின் கணக்கு @AtishiAAP என்பதாகும், மேலும் அவரது கணக்கில் அப்படி ட்வீட் எதுவும் காணப்படவில்லை. எனவே, இடுகையில் கூறப்பட்ட கூற்று தவறானது.
Note : This story was originally published by ‘Factly’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.