For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஒவைசி கையில் இருந்தது ராமரின் படமா? - உண்மை என்ன?

03:09 PM May 21, 2024 IST | Web Editor
ஒவைசி கையில் இருந்தது ராமரின் படமா    உண்மை என்ன
Advertisement

This News is Fact Checked by 'FACTLY'

Advertisement

AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி கையில் ராமரின் படத்தை வைத்திருப்பது போல், பகிரப்பட்டு வரும் புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டது என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு மத்தியில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி, இந்துக் கடவுளான ராமரின் உருவப்படத்தை வைத்திருக்கும் புகைப்படம் சமூக ஊடக தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்த பதிவில், மக்களவைத் தேர்தலில் தனது தோல்வியை உணர்ந்த ஒவைசி இந்து மதத்தின் ஆதரவை நாடுவதாக பகிரப்பட்டுள்ளது.

உண்மை சரிபார்ப்பு:

வைரலான இந்த படத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்க, கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்யப்பட்டது. இதன் மூலம், 2018-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதியன்று அசாதுதின் ஒவைசியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட இதேபோன்ற புகைப்படம் கண்டறியப்பட்டது. 

இந்த பதிவின் தலைப்பில், “மோச்சி காலனியைச் சேர்ந்த தலித்துகள் AIMIM கட்சித் தலைமையகமான #தாருஸ்ஸலாமில் #AIMIM தலைவர் பாரிஸ்டர் அசாதுதீன் ஒவைசியைச் சந்தித்து தங்கள் பகுதியில் (ரம்னாஸ்புரா பிரிவு, பகதூர்புரா தொகுதி) வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நன்றி தெரிவித்தனர்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

https://www.facebook.com/Asaduddinowaisi/photos/a.216569781743774/1716457225088348

இந்த பதிவில் இணைக்கப்பட்டிருந்த புகைப்படத்தில், ஒவைசி கையில் வைத்திருப்பது இந்துக்கடவுள் ராமரின் படம் அல்ல, டாக்டர் அம்பேத்கரின் உருவப்படத்தை வைத்திருக்கிறார்.  இரண்டு புகைப்படங்களிலும் ஓவைசியுடன் ஒரே நபர்கள் நிற்கிறார்கள் என்பது தெரியவந்தது.

புகைப்படங்களின் ஒப்பீடு

மக்களவைத் தேர்தலின் பின்னணியில் வைரலாகப் பரவிய AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி தொடர்பான பல்வேறு கூற்றுகள் உண்மையில்லை என நிரூபிக்கப்பட்டது.  மேலும், அசாதுதீன் ஒவைசி ராமர் படத்தை வைத்திருப்பதைக் காட்டும் புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டது என்பது கண்டறியப்பட்டது.

Note : This story was originally published by ‘FACTLY’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective...

Tags :
Advertisement