For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

100வது சர்வதேச டி20யில் வார்னர் புதிய சாதனை!

06:42 PM Feb 09, 2024 IST | Web Editor
100வது சர்வதேச டி20யில் வார்னர் புதிய சாதனை
Advertisement

ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், சர்வதேச டி20-யில் 3,000 ரன்கள் எடுத்த 2வது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவர் 25 அரை சதங்கள், 1 சதம் அடித்துள்ளார். 

Advertisement

ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான டி20 தொடர் இன்று தொடங்கியது. இன்று நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஜோஷ் இங்லிஷ் களமிறங்கினர். இந்த இணை சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. அதிரடியாக விளையாடிய ஜோஷ் இங்லிஷ் 39 ரன்கள் குவித்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

அதன்பின் களமிறங்கிய மிட்செல் மார்ஷ் (16 ரன்கள்), மேக்ஸ்வெல் (10 ரன்கள்), ஸ்டொய்னிஸ் (9 ரன்கள்), மேத்யூ வேட் (21 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் 36 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது.

இந்த போட்டியில், டேவிட் வார்னர் 36 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து அசத்தினார். 3 சர்வதேசப் போட்டிகளிலும் தனது 100வது போட்டியில் அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார். சர்வதேச டி20-யில் 3,000 ரன்கள் எடுத்த 2வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் டேவிட் வார்னர். 25 அரை சதங்கள், 1 சதம் அடித்துள்ளார். இதற்கு முன்பாக பின்ச் 3120 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. டேவிட் வார்னர் தனது 100வது டெஸ்டில் 200 ரன்கள், 100வது ஒருநாள் போட்டியில் 124 ரன்கள் மற்றும் 100வது டி20 போட்டியில் 70 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement