For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#WaqfAmendmentBill | மின்னஞ்சல் மூலம் 1.2 கோடி இமெயில்கள்!

11:41 AM Sep 23, 2024 IST | Web Editor
 waqfamendmentbill   மின்னஞ்சல் மூலம் 1 2 கோடி இமெயில்கள்
Advertisement

வக்ஃபு சட்டத் திருத்த மசோதா தொடா்பாக, நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு மின்னஞ்சல் மூலம் 1.2 கோடி கருத்துகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

நாடு முழுவதும் முஸ்லிம்களின் தொண்டு பணிகளுக்கு ‘வக்ஃபு’ சொத்துகள் அர்ப்பணிக்கப்படுகின்றன. இந்தச் சொத்தை மற்றவர்களின் பெயருக்கு மாற்ற முடியாது. இந்தச் சொத்துகளை நிர்வகிக்கும் சட்டபூர்வ நிறுவனமாக மாநிலங்கள் அளவில் வக்ஃபு வாரியங்கள் உள்ளன. இந்நிலையில், எந்தவொரு வக்ஃபு சொத்தையும் கட்டாயம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்தல், அரசு சொத்து வக்ஃபு சொத்தாக அடையாளம் காணப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தால், அதை வக்ஃபு சொத்தாக கருத முடியாது உள்ளிட்ட அம்சங்களுடன் வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

முஸ்லிம்களின் நிலம், சொத்துகள், மத விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம் ஆகியவற்றைப் பறிக்கும் நோக்கில், இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. தற்போது இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆராய்ந்து வருகிறது. இந்த மசோதா தொடா்பாக கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலம் கருத்து தெரிவிக்குமாறு பொதுமக்கள், தன்னாா்வலா்கள், நிபுணா்கள் உள்ளிட்டோரிடம் கடந்த மாதம் நாடாளுமன்ற கூட்டுக் குழு கேட்டுக்கொண்டது.

இதையும் படியுங்கள் : 3 மாதங்களுக்குள் 3 என்கவுன்ட்டர்கள்! | அதிரடி காட்டும் சென்னை #PoliceCommissioner அருண்!

இந்நிலையில், அந்த மசோதா தொடர்பாக மின்னஞ்சல் மூலம் 1.2 கோடி கருத்துகள் கிடைத்துள்ளதாகவும், அவற்றில் 75,000 கருத்துகளுக்கு வலுசேர்க்கும் ஆவணங்களும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வக்ஃபு சட்டத்திருத்த மசோதா தொடர்பாக அரசு அதிகாரிகள், சட்ட நிபுணா்கள், வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளைப் பெறும் நோக்கில், செப்.26 முதல் மும்பை, அகமதாபாத், ஹைதராபாத், சென்னை மற்றும் பெங்களூருக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு பயணம் மேற்கொள்ள உள்ளது.

Tags :
Advertisement