For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“நரியாக மாற வேண்டும்” - நாயாக மாறிய ஜப்பான் மனிதரின் விநோத விருப்பம்!

10:40 AM May 27, 2024 IST | Web Editor
“நரியாக மாற வேண்டும்”   நாயாக மாறிய ஜப்பான் மனிதரின் விநோத விருப்பம்
Advertisement

ஜப்பானில் கடந்த வருடம் நாயாக மாறிய நபர் தற்போது நரியாக மாற வேண்டும் என தெரிவித்துள்ளார். 

Advertisement

மனிதராக இருக்கும் நீங்கள் ரூ.12 லட்சம் செலவு செய்து நாயாக மாறுவீர்களா?.. நமக்கெல்லாம் நாயை பிடித்தாலும் இவ்வளவு செலவு செய்து நாயாக மாறமாட்டோம். ஆனால் கடந்த வருடம் ஜப்பான் நாட்டை சேர்ந்த டோகோ என்ற நபர் ரூ.12 லட்சம் செலவு செய்து நாயாக மாறினார்.  'I want to be an animal' என்ற யூடியூப் சேனலையும் இவர் வைத்துள்ளார்.  இவரின் இந்த செயல் அப்போது பெரும் பேசுபொருளாகியது.

தற்போது நாயாக இருக்கும் டோகோ பாண்டா,  கரடி,  பூனை அல்லது நரியாக மாற விரும்புவதாக கூறியுள்ளார்.  சமீபத்தில்,  ஒரு ஜப்பானிய செய்தி நிறுவனத்திடம் பேசிய டோகோ,  தற்போது தான் ஒரு புதிய விலங்காக வாழ்க்கையை வாழ விரும்புவதாகக் கூறியுள்ளார்.

“நான் இன்னொருவராக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.  ஆனால் நாய்களுக்கும்,  மனிதர்களுக்கும் வெவ்வேறு எலும்பு அமைப்புகளும்,  கால்கள் மற்றும் கைகளை வளைக்கும் விதமும் உள்ளன.  எனவே இது போன்ற தோற்றத்தை உருவாக்குவது மிகவும் கடினம்.  வெளியில் செல்லும் போது அழுக்காகி விடுவது கொஞ்சம் வருத்தமாக உள்ளது.  என் தோல்களில் நிறைய தூசிகள் மாட்டிக் கொள்கின்றன. அதனை எடுக்க நிறைய நேரம் ஆகின்றன.

தற்போது என் கைகால்களை நாய்களைப் போல் மாற்றுவதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறேன்.  இருப்பினும் நான் மற்றொரு விலங்காக விரும்புகிறேன். பாண்டா, கரடி, பூனை அல்லது நரியாக கூட நன்றாக இருக்கும்.  ஆனால், அவற்றில் இரண்டு சாத்தியமற்றதாக இருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement