For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Kalki2898AD 2-ம் பாகத்திற்கு Waiting-ஆ? தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட் என்ன தெரியுமா?

08:38 PM Aug 31, 2024 IST | Web Editor
 kalki2898ad 2 ம் பாகத்திற்கு waiting ஆ  தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட் என்ன தெரியுமா
Advertisement

‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின் 2ம் பாகம் குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்பனா தத் அப்டேட் கூறியுள்ளார்.

Advertisement

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கல்கி 2898’. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் ஜூன் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

அறிவியல் – புராண கதை மிக்சிங்கில் உருவான இப்படம் அதன் அட்டகாசமான கிராஃபிக்ஸ் மறு்றும் மேக்கிங் காட்சிகளில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் திரைக்கதை சோர்வைத் தருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இந்த திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.191 கோடியும், இரண்டாம் நாளில் மொத்தம் ரூ.295.5 கோடி வரை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது.

இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் ஆக.22-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகி அங்கும் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் 2-ம் பாகத்தில் கமல்ஹாசன் கதாபாத்திரத்தினை வைத்து கதை நகரும் என்று இயக்குநர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இதனிடையே, 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு உடனடியாக தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், கல்கி 2898 ஏடி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்பனா தத், “கல்கி 2898 ஏடி’ டத்தின் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு 2025-ம் ஆண்டு தொடக்கத்தில் தொடங்கப்படும். ஆனால் 2028-ம் ஆண்டு தான் வெளியாகும்” என தெரிவித்துள்ளார். இந்தப் பேட்டி இணையவாசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
Advertisement