For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்கிறார் விசிக தலைவர் திருமாவளவன்!

08:33 AM Dec 09, 2024 IST | Web Editor
முதலமைச்சர் மு க ஸ்டாலினை நேரில் சந்திக்கிறார் விசிக தலைவர் திருமாவளவன்
Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் தலைமைச் செயலகத்தில் நேரில் சந்திக்க உள்ளார்.

Advertisement

தமிழக சட்டசபையில் துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுவதற்காக ஜூன் 20-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை 10 நாட்கள் கூட்டம் நடைபெற்றது. பேரவை விதிகளின்படி, சட்டசபை கூட்டம் முடிவுற்ற நாளில் இருந்து 6 மாதத்துக்குள் மீண்டும் நடத்த வேண்டும். இந்நிலையில், தமிழக சட்டசபை இன்று கூடும் என்று பேரவை தலைவர் அப்பாவு கடந்த நவம்பர் 25-ம் தேதி அறிவித்திருந்தார்.

அந்த வகையில், பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் இன்று காலை 9 மணி அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பெஞ்சால் புயல் பாதிப்புக்கு நிவாரண நிதி குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement