For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வி.பி. சிங் நினைவு நாள் ; ”பதவிகளைத் துச்சமாக நினைத்து, சமூக நீதியை உயிர்க்கொள்கையாக மதித்தவர்”- முதலமைச்சர் மு.க ஸ்டாலின் புகழாரம்

பதவிகளைத் துச்சமாக நினைத்து, சமூக நீதியை உயிர்க்கொள்கையாக மதித்தவர் வி.பி சிங் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
11:19 AM Nov 27, 2025 IST | Web Editor
பதவிகளைத் துச்சமாக நினைத்து, சமூக நீதியை உயிர்க்கொள்கையாக மதித்தவர் வி.பி சிங் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
வி பி  சிங் நினைவு நாள்   ”பதவிகளைத் துச்சமாக நினைத்து  சமூக நீதியை உயிர்க்கொள்கையாக மதித்தவர்”  முதலமைச்சர் மு க ஸ்டாலின் புகழாரம்
Advertisement

முன்னாள் பிரதமர் வி.கே.சிங்கின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”நாடு போற்றும் சமூகநீதிக் காவலர் வி.பி சிங் அவர்களது புகழ் ஓங்குக.  தமிழ்நாடும், தலைவர் கலைஞரும் மிகவும் நேசித்த தலைவர்; என் மீது அன்பு காட்டியவர்.

Advertisement

 பதவிகளைத் துச்சமாக நினைத்து,சமூக நீதியையும் உயிர்க்கொள்கையாக மதித்தவர்.  தமிழ்நாட்டுக்கும் அவருக்கும் இருக்கும் உறவின் வெளிப்பாடாக உயர்ந்து நிற்கிறது 2023-ஆம் ஆண்டு இதே நாளில் நான் திறந்து வைத்த வி.பி.சிங் அவர்களின் முழுவுருவச் சிலை!

EWS , NEET என விதவிதமான வழிகளில் சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆட்சியாளர்கள் ஒன்றியத்தில் இருக்கும்போது வி.பி.சிங் போன்ற பிரதமரை இன்னும் கூடுதலாகவே 'Miss' செய்கிறோம்.

சொல்லிலும் செயலிலும் தமிழர்களின் நண்பராக விளங்கிய முன்னாள் பிரதமர் விஸ்வநாத பிரதாப் சிங் அவர்களது நினைவுநாளில் அவரது சமூகநீதிச் சாதனைகளைப் போற்றி வணங்குகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

Tags :
Advertisement