Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சிறப்பு பூஜை செய்து வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்!

03:43 PM Apr 18, 2024 IST | Web Editor
Advertisement

மதுரையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.  தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  நேற்றுடன் பிரசாரம் முடிவடைந்த நிலையில் நாளை வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

இதையும் படியுங்கள் : “வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு இருக்கவேண்டும்!” – திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!

மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன . இதில், மதுரை நாடாளுமன்ற
தொகுதிக்குட்பட்டு மதுரை கிழக்கு,  மேற்கு,  வடக்கு,  தெற்கு,  மத்தி,  மேலூர் என 6
தொகுதிகள் உள்ளன.  தேனி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டு சோழவந்தான் (தனி),
உசிலம்பட்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள்,  விருதுநகர் நாடாளுமன்ற
தொகுதிக்குட்பட்டு திருப்பரங்குன்றம்,  திருமங்கலம் ஆகிய 2 சட்டமன்ற
தொகுதிகளும் உள்ளன.

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் 21 வேட்பாளர்கள்,  தேனி நாடாளுமன்ற தொகுதியில் 25 வேட்பாளர்கள்,  விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் சின்னம் மற்றும் பெயர் மட்டுமே பொருத்த முடியும்.  அதன்படி, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் 2 மின்னணு வாக்குச் செலுத்தும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

மதுரை மாவட்ட அளவில் 13,21,795 ஆண் வாக்காளர்களும்,  13,67,05 பெண் வாக்காளர்களும், 271 மூன்றாம் பாலினத்தார் என மொத்தமாக 26,94,585 வாக்காளர்கள் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்காக மதுரை மாவட்டத்தில் 2,751 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் 1,573 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. மாவட்டத்தில் 3,303 வாக்குச் செலுத்தும் இயந்திரங்கள், 3,303 வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3,574 வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள்
பயன்படுத்தப்படுகிறது.

தேர்தல் பணிக்காக மாவட்டத்தில் 459 மண்டல அலுவலர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர்.  மதுரை மாவட்டத்தில் 13,204 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.  முந்தைய தேர்தல்களில் மிகக் குறைந்த வாக்குப்பதிவு, மிக அதிக வாக்குப்பதிவு, அசம்பாவிதங்கள் போன்ற பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு 359 இடங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.

இம்மையங்களில் தேர்தல் நுண் பார்வையாளர்கள்,  வெப் காஸ்டிங் முறை ஆகியவை மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.  மதுரை மாவட்டத்தில் 1,788 வாக்குச்சாவடி மையங்கள் வெப் காஸ்டிங் முறையில் கண்காணிக்கப்பட உள்ளன.  மத்திய அரசு நிறுவனங்கள்,  வங்கிகளில் பணிபுரியும் 428 அலுவலர்கள் தேர்தல் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  தேர்தல் நடவடிக்கைகளில் நுண் பார்வையாளர்களின் பணி மிகவும் முக்கியமானதாகும்.   இப்பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு தொடங்கி முடியும் வரை தொடர்ந்து கண்காணித்து அதன் அறிக்கையை தேர்தல் பார்வையாளருக்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.

மதுரை மாநகர் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் 7500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.  இந்நிலையில் உதவி தேர்தல் அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ள
வாக்குப்பதிவு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்புடன்
வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது.  மதுரை மாநகராட்சி மண்டலம் எண் 2 இல் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்,  வாக்குப்பதிவு தளவாடங்கள்,
சக்கர நாற்காலிகள் உள்ளிட்டவை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது,

முன்னதாக வளாகத்தில் உள்ள விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டன.  பின்னர்,  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை முன்பாகவும் பூஜை செய்து வழிபாடு நடத்தி மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் அனுப்பி
வைக்கப்பட்டன.

Tags :
Election2024Elections2024ElectionswithNews7tamilLoksabha ElectionMaduraiTNElection
Advertisement
Next Article