சொன்னிங்களே செஞ்சிங்களா..? CM சார்... - தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை இன்று தொடங்கினார். அதன்படி, திருச்சி மார்க்கெட் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து அரியலூரிலும் விஜய் பிரச்சாரம் மேர்கொண்டார்.
.அவர் பேசியது,
”2026 ஜனநாயகப் போருக்கு தயாராவற்கு முன்பு மக்களை சந்திக்க வந்துளேன்.உங்க விஜய் நான் வர்றேன்னு நமது மதுரை மாநாட்டில் சொன்னதுபோலவே உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். உங்கள் சார்பாக நம்மை மேலேயும் கீழேயும் மிக மோசமாக ஆண்டுகொண்டிருக்கும் பா.ஜ.க.வையும், தி.மு.க.வையும் கேள்வி கேட்க வந்துள்ளேன். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு ஒத்து வராத திட்டம். இதன் மூலம் தேர்தல் தில்லுமுல்லுதான் நடக்கும்.அதற்காகத்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு இதை கொண்டு வருகிறது. பார்லிமெண்ட் தொகுதிகள் மறுசீராய்விலும் தென்னிந்தியாவிற்கு எதிராக மிகப்பெரிய சதி உள்ளது.இதை தமிழக வெற்றிக்கழகம் ஏற்காது.எப்போதும் எதிர்க்கும்.
முதல்வர் ஸ்டாலின் சார் விட்ட ரீல்கள் எல்லாம் பாதியிலேயே அறுந்துபோய்விட்டது. அப்படி அறுந்துபோன ரீல்களைப் பற்றி சொல்லட்டுமா?. நீட் தேர்வு ரத்து, கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை, மாத மின்சாரக் கட்டணம், பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம், தமிழகத்தில் இருக்கும் வேலை வாய்ப்புகளில் 75% தமிழர்களுக்கு, தூய்மைப் பணியாளர்கள் பணி,ஊதியம்,ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றம், அனைத்து அரசு வேலை வாய்ப்புகளிலும் பெண்களுக்கு 40% முன்னுரிமை, இலங்கைத் தமிழர்களுக்கு பொது வாக்கெடுப்பு போன்ற வாக்குறுதிகளை அளித்தீர்களே அவற்றை நிறைவேற்றினீர்களா...? CM சார் என்று கேள்வி எழுப்பினார்.