For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உருட்டுக் கட்டைகளுடன் வீட்டில் குவிந்த தொண்டர்கள், சீமான் மீது வழக்குப்பதிவு !

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தொண்டர்கள் மீது நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
11:55 AM Jan 24, 2025 IST | Web Editor
உருட்டுக் கட்டைகளுடன் வீட்டில் குவிந்த தொண்டர்கள்   சீமான் மீது வழக்குப்பதிவு
Advertisement

தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து, நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என மே 17 இயக்கத்தினர், தந்தை பெரியார் திக உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு அறிவித்தது.

Advertisement

அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் சீமான் வீட்டை பெரியாரின் உணர்வாளர்கள் முற்றுகையிட முயன்ற போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து வீட்டின் முன் குவிந்த பெரியாரிய உணர்வாளர்கள் வீட்டை முற்றுகையிட முயன்றனர். காவல் துறையினர் அமைத்த தடுப்புகளை மீறி அவர்கள் செல்ல முயன்றனர். மேலும், சீமான் உருவப்படத்தை செருப்பால் அடித்தும், உருவ பொம்மையை எரித்தும் பெரியாரிய உணர்வாளர்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து தடுப்புகளை மீறி செல்ல முயன்ற பெரியாரிய உணர்வாளர்களை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, சீமான் வீட்டை முற்றுகையிட்டு போராட வந்த பெரியாரிய ஆதரவாளர்களை தாக்குவதற்காக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் சீமான் வீட்டு முன்பு உருட்டுக்கட்டையுடன் திரண்டு இருந்தனர்.

இந்த நிலையில், சென்னை நீலாங்கரை காவல்நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சீமானுக்கு ஆதரவாக அவரது வீட்டில் உருட்டுக்கட்டையுடன் திரண்ட நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் 150 பேர் மீது அனுமதியின்றி கூட்டம் கூட்டியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.

Tags :
Advertisement