தவெக மாநாட்டிற்கு வந்த தொண்டர் உயிரிழப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநில மாநாடு கடந்தாண்டு அக்டோபர் 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, தற்போது 2-வது மாநில மாநாடு மதுரையில் இன்று (ஆகஸ்ட் 21) நடைபெறுகிறது. இம்மாநாட்டிற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தவெகவின் தொண்டர்கள் மற்றும் விஜயின் ரசிகர்கள் மதுரை பராபத்தி மாநாடு திடலில் கூடியுள்ளனர்.
இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 33) மதுரை பராபத்தியில் நடைபெறும் தவெகவின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு நேற்று இரவு நண்பர்களுடன் வேனில் புறப்பட்டு சென்றுள்ளார். மதுரை சக்கிமங்கலம் அருகே சென்றுகொண்டிருக்கும் போது பிரபாகரன் வேனை நிறுத்தி விட்டு சிறுநீர் கழிக்க சென்றுள்ளார்.
ஆனால் பிரபாகரன் மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் நண்பர்கள் அவரை தேடிச் சென்றுள்ளனர். அப்பொழுது பிரபாகரன் மயக்க நிலையில் காணப்பட்டார்
இதனை அடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் பிரபாகரன் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் போது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.