For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

VJS51 – திரைப்படத்தின் தலைப்பு வெளியானது!

07:01 PM May 17, 2024 IST | Web Editor
vjs51 – திரைப்படத்தின் தலைப்பு வெளியானது
Advertisement

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 51வது திரைப்படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அண்மையில் ‘விடுதலை பாகம் 1’, ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து பாலிவுட்டில் தடம் பதித்த விஜய் சேதுபதியின் ‘ஃபார்ஸி’ வெப் சீரிஸ் தமிழ் மற்றும் ஹிந்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் நிலையில், இவரின் 50-ஆவது படமான  “மகாராஜா” விரைவில் வெளியாக உள்ளது. ‘குரங்கு பொம்மை’ திரைப்படத்தின் இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், விஜய் சேதுபதியின் 51 வது திரைப்படத்தை ஆறுமுககுமார் என்ற இயக்குநர் இயக்கி வந்தார் என்பது குறிப்பிடதக்கது. இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜஸ்டின் பிராபகரன் இசையமைத்திருக்கிறார்.

இதையும் படியுங்கள் : சூர்யாவின் ‘கங்குவா’ போர்க் காட்சி 10,000க்கும் மேற்பட்டவர்களை வைத்து படமாக்கப்பட்டது

விஜய் சேதுபதியின் 51வது திரைப்படத்தின் தலைப்பு இன்று மாலை 6.30 மணியளவில்  வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது முதல் பார்வை போஸ்டர் மற்றும் திரைப்படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளனர். இந்த திரைப்படத்திற்கு 'ஏஸ்' எனப் பெயரிட்டுள்ளார்கள். இதன் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

https://x.com/7CsPvtPte/status/1791453875087745374

Tags :
Advertisement