For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவர திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு..!

தமிழ் நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கு எதிராக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
06:54 PM Nov 03, 2025 IST | Web Editor
தமிழ் நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கு எதிராக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவர திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு
Advertisement

தமிழ் நாடு உள்ளிட்ட 12  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு தமிழ் நாட்டில் உள்ள கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

Advertisement

தமிழ்நாட்டில் வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். இதில் விசிக, மக்கள் நீதி மையம், மதிமுக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.  மேலும் நாம் தமிழர், பாமக, தவெக உள்ளிட்ட 21 கட்சிகள் இக்கூட்டத்தை புறக்கணித்தன.

இக்கூட்டத்தில் வாக்களர் பட்டியல் சிறப்பு தீவர திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை வழக்கு தொடரப்படும் என்று  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   இந்த நிலையில் வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்திற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமனத்தில் திமுக சார்பில் மனுதாக்கல் செய்துள்ளது.

திமுக சார்பாக அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கள் செய்துள்ள மனுவில்,

“பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் விவகாரத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது அதே நேரத்தில் அது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் தற்போது வரை இறுதி உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை

இந்த சூழலில் தமிழ்நாட்டில் வாக்காளர் தீவிர திருத்தம் செய்வது என்பது ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். தமிழகத்தில் தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ள நிலையிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு மேற்கொள்வது ஏற்க முடியாது

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும. காலகட்டத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகை, பொங்கல் பண்டிகை போன்றவை வருவதால், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியில் விடுபடும் வாக்காளர்களோ, சேர விரும்பும் வாக்காளர்களுக்கு சிரமம் ஏற்படும், இதனால் அவர்கள் தங்களது ஓட்டுரிமையை இழக்கும் நிலை ஏற்படும்.

உச்சநீதிமன்றத்தில் பீகார் தொடர்பான சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பு வராத நிலையில், தமிழகத்தில் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, தமிழக மக்களின் ஓட்டுரிமைக்கு எதிரான செயல், எனவே இந்த திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் கைவிட வேண்டும்.

SIRஐ நடைமுறைப்படுத்த உகந்த காலம் இதுவல்ல.தேர்தல் ஆணையத்துக்கு இந்த நடைமுறையை செயல்படுத்துவதற்கு அதிகாரம் இல்லை. அரசிலமைப்புச் சட்டம் தந்த அதிகாரங்களை மீறி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. SIR என்பது தகுதியுடைய வாக்காளர்கள் நீக்கப்படுவதற்கும் தகுதியற்றோர் சேர்க்கப்படுவதற்கும் ஏதுவான வகையில் நடைமுறை அமைந்துள்ளது. இதை நடைமுறைபடுத்தினால், லட்சக்கணக்கான தமிழ்நாடு வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை இழக்கும் அபாயம் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement