For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விருதுநகர் சொக்கநாத சுவாமி ஆலய மகர நோன்பு திருவிழா - சாமி எய்த அம்புகளை பிடிக்க போட்டி போட்டுக்கொண்டு பாய்ந்த பக்தர்கள்!

10:54 AM Oct 25, 2023 IST | Web Editor
விருதுநகர் சொக்கநாத சுவாமி ஆலய மகர நோன்பு திருவிழா   சாமி எய்த அம்புகளை பிடிக்க போட்டி போட்டுக்கொண்டு பாய்ந்த பக்தர்கள்
Advertisement
விருதுநகரிலுள்ள புகழ்பெற்ற சொக்கநாத சுவாமி ஆலயத்தில் விஜயதசமியை முன்னிட்டு நடைபெற்ற மகர நோன்பு திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் பங்கேற்ற பக்தர்கள் சாமியின் அம்புகளை போட்டி போட்டுக்கொண்டு பிடித்தனர்.

விருதுநகரில் அமைந்துள்ளது புகழ்பெற்ற சொக்கநாத சுவாமி ஆலயம்.  அறநிலையத்துறை நிர்வகித்து வரும் இவ்வாலயத்தில் ஓவ்வொரு ஆண்டும் விஜயதசமி அன்று நடைபெறும் மகர நோன்பு திருவிழா உலகப் புகழ் பெற்றதாகும்.

Advertisement

அதன்படி இந்தாண்டும் விஜயதசமி திருநாளான நேற்று மகர நோன்பை முன்னிட்டு சாமி சந்திர சேகர் அவதாரம் பூண்டு தங்க குதிரை வாகனத்தில் வீதியுலா வந்து வன்னி நந்தவனம் பகுதியில் வைத்து அசுரர்களை வீழ்த்த அம்பு எய்திடும் விழா நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு சாமி எய்த அம்புகளை பிடித்துச் சென்றனர்.

முன்னதாக திருவிழாவிற்கான 48 நாட்கள் கடும் விரதமிருந்து புலி வேடமிட்டு ஆடி வந்த இளைஞர்களை அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

வேந்தன்

Tags :
Advertisement