For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி விலகல்?

05:03 PM Jan 22, 2024 IST | Web Editor
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி விலகல்
Advertisement

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் விராட் கோலி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு,  அதனைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.   இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் ஜன.25-ம் தேதி தொடங்கவுள்ளது.

இங்கிலாந்து அணி இந்த டெஸ்ட் தொடருக்காக அபு தாபியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.  இந்த நிலையில்,  இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி முதல் இரண்டு போட்டிகளிலிருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:  நாங்களும் சளைத்தவர்கள் அல்ல… பெங்களூருவில் ராமர் கோயிலை திறந்து வைத்த சித்தராமையா!

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

"சொந்த காரணங்களுக்காக முதல் 2 போட்டிகளில் மட்டும் விலகுவதாக விராட் கோலி தெரிவித்துள்ளர்.   மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags :
Advertisement