டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வு?... வெளியான முக்கிய தகவல்!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் ரோகித் சர்மா தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில் நட்சத்திர வீரர் விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் விராட் கோலி இதுகுறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் தனது முடிவை அவர் பிசிசிஐ-யிடம் தெரிவித்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விராட் தனது முடிவை மாற்றிக் கொள்ளுமாறு அவர்கள் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
2024 டி20 உலகக் கோப்பையை வெற்றிக்கு பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோகித், விராட் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளிலும் விலகுவதாக அறிவித்துள்ளனர்.
விராட் கோலி இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த போட்டிகளில் அவர் 9230 ரன்கள் எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 254 நாட் அவுட் ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 30 சதங்களையும், 31 அரைசதங்களையும் விராட் கோலி அடித்துள்ளார். இதில் 1027 பவுண்டரிகளும், 30 சிக்சர்களும் அடங்கும்.