For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#ViralVideo | "யாரு சாமி நீங்க"… இணையத்தில் வைரலாகும் 3D விளம்பரம்!

05:27 PM Sep 29, 2024 IST | Web Editor
 viralvideo    யாரு சாமி நீங்க … இணையத்தில் வைரலாகும் 3d விளம்பரம்
Advertisement

உணவகம் ஒன்றின் 3டி விளம்பரம் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

சிறிய கடைகளில் இருந்து பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் வரை வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கான முக்கிய ஆயுதமாக விளம்பரம் உள்ளது. இதற்காக தொலைக்காட்சி, ரேடியோவில் ஆரம்பித்து ரீல்ஸ் வரையிலும் விளம்பரம் செய்து வருகின்றனர். பெரும்பாலான வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக புதிய முறையிலான விளம்பர யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அதேபோன்று, பெங்களூரில் உள்ள உணவகம் ஒன்று வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதுவிதமான முறையில் விளம்பரம் செய்துள்ளது.

அதன்படி, பெங்களூரில் உள்ள திண்டீஸ் உணவகம் 3டி மூலம் விளம்பரம் செய்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் விளம்பர பலகையில், ஒரு நபர் ஃபில்டர் காபியை ஊற்றி பொதுமக்களுக்கு வழங்குவது போல் அமைந்துள்ளது. மேலும், அந்த விளம்பரப் பலகையில், 3 இடங்களில் கிளை உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://twitter.com/ksvenu247/status/1839530752863502525

எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ 1 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இணையவாசிகள் பலரும், "இது உண்மையா?" என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், சிலர் இது ஓட்டுநர்களை கவனச் சிதறலுக்கு உள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், இதனால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர்.

Tags :
Advertisement