Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காங்கிரஸை புகழ்ந்து மோகன் பகவத் பேசும் வைரல் வீடியோ உண்மையானதா? - PTI கூறுவது என்ன?

03:21 PM May 27, 2024 IST | Web Editor
Advertisement

This news Fact Checked by PTI

Advertisement

மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் காங்கிரஸ் கட்சியினைப் பற்றி புகழ்ந்து பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ குறித்த உண்மைத் தன்மையை பிடிஐ செய்தி நிறுவனம் சரிபார்புக்கு உட்படுத்தியது. இது குறித்து விரிவாக காணலாம்.


மோகன் பகவத்தின் வைரல் வீடியோ

இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49) நடைபெற்றது.

இதனையடுத்து ஆறாம் கட்ட வாக்குப்பதிவு மே 25ன் தேதி நடைபெற்றது. இதில், பீகார் (8), ஜார்க்கண்ட் (4), ஜம்மு காஷ்மீர் (1), ஒடிசா (6), உத்தரப்பிரதேசம் (14), மேற்கு வங்கம் (8), ஹரியானா (10) மற்றும் டெல்லி (7) ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 58 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றன.  6ம் கட்ட தேர்தலில் 59.06% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்த நிலையில் சில தினங்களாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் மோகன் பகவத் காங்கிரஸ் கட்சியை புகழ்ந்து பேசியுள்ளார். இந்திய சுதந்திர போராட்டத்தில் காங்கிரஸின் பங்கினை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியை அவர் பாராட்டியுள்ளார்.   மே22ம் தேதி பேஸ்புக் பயனாளர் ஒருவர் தனது பக்கத்தில் பகிர்ந்ததை தொடர்ந்து இந்த வீடியோ சமூக தளங்களில் வைரலானது.

https://www.facebook.com/watch/?v=234045900604514&ref=sharing

உண்மை சரிபார்ப்பு

பிடிஐ நிறுவனம் இந்த வீடியோ குறித்து உண்மை சரிபார்ப்பு ஆய்வுக்கு உட்படுத்தியது. அதன்படி InVid டூலை பயன்படுத்தி அந்த வைரல் வீடியோ தனித் தனித் ஃபிரேம்களை எடுத்து அதனை கூகுள் லென்ஸை பயன்படுத்தி தேடுதலுக்கு உட்படுத்தியது. கூகுள் தேடலின் முடிவில் காங்கிரஸை புகழ்ந்து பேசும் மோகன் பகவத் எனும் கேப்சனுடன் பல வீடியோக்கள் பகிரப்பட்டதை பிடிஐ கண்டறிந்தது.

இந்த கூகுள் தேடலின் தொடர்ச்சியாக இதே கீ ஃபிரேம்களுடன் இன்னொரு வீடியோவையும் பிடிஐ கண்டுபிடித்தது. அந்த வீடியோ தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் தங்களது பேஸ்புக் பக்கத்தில் 18- செப்டம்பர் -2018ம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்டதை பிடிஐ உறுதி செய்தது.  இதனைத் தொடர்ந்து இதே தேதியில் மோகன் பகவத் குறித்த பேச்சு குறித்து கூகுள் மற்றும் யூடியூபில் பிடிஐ தேடியது. இதன் விடையாக NDTV ல் இதே வீடியோ செப்டம்18 , 2018ல் பதிவேற்றம் செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.

முடிவு:

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் காங்கிரஸ் கட்சியினைப் பற்றி புகழ்ந்து பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இந்த வீடியோ தற்போது பேசியது அல்ல கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி பேசிய பழைய வீடியோ என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது

Note : This story was originally published by PTI and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
BJPCongressElection2024Factcheckfake newsInidan Freedom MovementMohan BagawathRSSRSS Chiefspeech
Advertisement
Next Article