For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கிரீஸ் நாட்டில் இளம் பெண்ணை கொலை செய்த இந்தியர் என வைரலாகும் வீடியோ - உண்மை என்ன ?

06:35 AM Nov 16, 2024 IST | Web Editor
கிரீஸ் நாட்டில் இளம் பெண்ணை கொலை செய்த இந்தியர் என வைரலாகும் வீடியோ   உண்மை என்ன
Advertisement

This News Fact Checked by ‘Factly’

கிரீஸ் நாட்டில் கிறிஸ்தவ பெண்ணை கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. இந்தியாலிருந்து குடியேறிய இளைஞர்தான் அந்தப் பெண்ணை கொலை செய்ததாகவும் , அவர் கைது செய்யப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்த உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.

Advertisement

கிரீஸ் நாட்டில் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த இளம் பெண் ஒருவர் தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்டது இந்தியாவைச் சார்ந்தவர்தான் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து உண்மைத் தன்மையை அறிய “பேக்ட்லி” உண்மை சரிபார்ப்பு நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது.

உண்மை சரிபார்ப்பு

சமூக வலைதளங்களில் பரவிய வைரல் வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து அதனை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தியபோது அது 22 ஜூன் 2023 அன்று வெளியிடப்பட்ட கிரேக் சிட்டி டைம்ஸின் பத்திரிக்கையில்ன் செய்தி அறிக்கைக்கு  அழைத்துச் சென்றது. அந்த செய்தியில் வைரலான அதே வீடியோ உள்ளது.

மேலும் அந்த செய்தி அறிக்கையின்படி, வைரல் வீடியோவில் காணப்பட்ட நபர் கிரேக்க தீவான கோஸில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிந்த 27 வயது போலந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டிருந்தது.

இந்த சம்பவம் குறித்து பல செய்தி அறிக்கைகள் பல ஊடகங்களில் பதிவானதை காண முடிந்தது. ஆனால் இந்த சம்பவத்தில் ஒரு இந்திய குடியேறியும் சம்பந்தப்பட்டதாக அந்த செய்திகளில் குறிப்பிடவில்லை. உண்மையில் அந்த கொலையில் தொடர்புடையாதாக கூறி 32 வயதான சலாவுதீன் எஸ் என்ற வங்கதேசத்தைச் சார்ந்தவர் கைது செய்யப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் இருந்து வெளியாகும் டாக்கா ட்ரிப்யூனில் பத்திரிக்கையில் வெளியான செய்தியின்படி , 27 வயதான பெண் ஒருவர் 12 ஜூன் 2023 அன்று காணாமல் போனதாகவும் அவரது உடல் பின்னர் 18 ஜூன் 2023 அன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையில் வங்கதேசத்தைச் சார்ந்த சலாவுதீனின் ரூம்மேட் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே போலந்து பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் வங்கதேச குடியேறி கைது செய்யப்பட்ட பழைய வீடியோவை இந்தியக் குடியேறி என தவறாக பரப்பப்பட்டு வருவது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

முடிவு:

கீரீஸ் நாட்டில் இளம் கிறிஸ்தவ பெண் கொல்லப்பட்ட வழக்கில் இந்தியர் கைது என சமூக வலைதளங்களில் பரவிய தகவல்கள் பொய் என்றும் அந்த சம்பவத்தில் வங்காள தேசத்தை சார்ந்த குடியேறிதான் கைது செய்யப்பட்டார் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகியுள்ளது.

Note : This story was originally published by ‘Factly’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement