Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியின மக்களின் மீதான வன்முறை கணிசமாக அதிகரித்துள்ளது!” - மத்திய அரசு

05:20 PM Jul 24, 2024 IST | Web Editor
Advertisement

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களின் மீதான வன்முறை கணிசமாக அதிகரித்துள்ளது என்பது மாநிலங்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

Advertisement

மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் குமார் ஜா என்பவர் நாடு முழுவதும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களின் மீதான வன்முறை அதிகரித்துள்ளதா? அது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்தும் எழுத்துப்பூர்வமாக மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வலே, நாடு முழுவதும் மாநில வாரியாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை மாநிலங்களவையில் வழங்கியுள்ளார்.

அதன்படி தமிழ்நாட்டில் 2020ல் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான குற்றங்கள் குறித்து 1,274 வழக்குகள் பதிவான நிலையில், 2021ல் அதன் எண்ணிக்கை 1,377 ஆகவும், 2022ல் 1,767 ஆகவும் அதிகரித்துள்ளது. இதே போல் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் என்ற பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2020ல் 23 ஆக இருந்த நிலையில், 2021ல் 39 ஆகவும், 2022ல் 67 ஆகவும் அதிகரித்துள்ளது என்பது மத்திய அரசு வழங்கி உள்ள புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

Tags :
Athawale Ramdas BanduAtrocities Against Tribal PeopleBackward classCentral governmentnews7 tamilNews7 Tamil UpdatesTamilNaduTribalUnion Minister Ramdas AthawaleViolence
Advertisement
Next Article