கனமழை, வெள்ளம் எதிரொலி | விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29ம் தேதி புயலாக மாறியது. ஃபெஞ்சல் என பெயரிப்பட்டிருந்த இந்த புயல் நேற்று முன் தினம் இரவு மரக்காணம் பகுதியில் கரையை கடந்தது. இந்த ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், விழுப்புரம் மாவட்டத்தை சுற்றியுள்ள 50-திற்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : திருவண்ணாமலை நிலச்சரிவு – கனமழையால் மீட்புப் பணியில் தொய்வு!
இந்நிலையில், ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழை, வெள்ளம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடியா நிலையில் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச. 03ம் தேதி) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சி.பழனி உத்தரவிட்டுள்ளார்.