For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“மூன்று மொழிகளில் படங்களை வெளியிடும் விஜய் மும்மொழிக் கொள்கை பற்றி கருத்து சொல்லக்கூடாது” - தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

மூன்று மொழிகளில் படங்களை வெளியிடும் விஜய் மும்மொழிக் கொள்கை பற்றி கருத்து சொல்லக்கூடாது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
06:03 PM Feb 16, 2025 IST | Web Editor
மூன்று மொழிகளில் படங்களை வெளியிடும் விஜய் மும்மொழிக் கொள்கை பற்றி கருத்து சொல்லக்கூடாது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
“மூன்று மொழிகளில் படங்களை வெளியிடும் விஜய் மும்மொழிக் கொள்கை பற்றி கருத்து சொல்லக்கூடாது”   தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்
Advertisement

சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் சென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜி.பாஸ்கரின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது,

Advertisement

"வாரிசு அரசியலை பின்பற்றாமல் ஒரு மாவட்ட தலைவரை பாஜகவில் தேர்ந்தெடுத்துள்ளோம். மும்மொழிக் கொள்கையில் தாய்மொழிக்கு தான் பிரதான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் திமுக, தமிழ்நாட்டில் தமிழ் கற்பதை எதிர்க்கிறார்களா?  என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி கேட்டார்.

அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் பல பள்ளிகளில் மும்மொழிக் கொள்கைகள்
கற்பிக்கப்படும்போது அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் மூன்று மொழிகளை படிக்கக் கூடாதா?. திமுக குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளில் மூன்று மொழிகள்
கற்பிக்கப்படுகின்றன. மாறிவரும் உலகத்தில் மாணவர்கள் இன்னொரு மொழியை கூடுதலாக கற்றுக் கொண்டால் உங்களுக்கு என்ன பிரச்னை?

நாங்கள் இந்தியை திணிக்கவில்லை மூன்றாவதாக வேறு எந்த ஒரு மொழியாவது கற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறோம். ஆனால், திமுகவினர்தான் இந்தி திணிப்பை மக்கள் மீது திணிக்கின்றனர். நடிகர் விஜயின் திரைப்படம் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் கூட வெளியாகிறது. உங்கள் வியாபாரத்திற்கு மட்டும் மும்மொழிக் கொள்கை தேவை ஆனால் மாணவர்கள் மூன்று மொழிகளை கற்றுக் கொள்ளக் கூடாதா?

மும்மொழிக் கொள்கை குறித்து எல்லாம் நடிகர் விஜய் கருத்து
சொல்லக்கூடாது. அப்படி சொல்வதென்றால் தனது படங்களை தமிழில் மட்டும்தான் வெளியிடுவேன் என விஜய் முதலில் சொல்ல வேண்டும். ஒரு சாதாரண அரசாங்க பள்ளி மாணவ மாணவியர் இந்தி மட்டுமில்லாமல் தெலுங்கு அல்லது மலையாளமும் கற்றுக் கொண்டால் ஆந்திராவிலோ அல்லது கேரளாவிலோ ஒரு வேலையை பெற முடியும். மாணவர்களுக்கு
கிடைக்க வேண்டிய நிதியை தடுப்பது மத்திய அரசு அல்ல தமிழ்நாடு
அரசுதான்"

இவ்வாறு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement