For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தவெகவின் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேகச் செயலி - நாளை அறிமுகம் செய்கிறார் விஜய்!

தவெக  உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேகச் செயலியை தவெக தலைவர் விஜய் நாளை அறிமுகம் செய்து வைக்கிறார்
09:14 PM Jul 29, 2025 IST | Web Editor
தவெக  உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேகச் செயலியை தவெக தலைவர் விஜய் நாளை அறிமுகம் செய்து வைக்கிறார்
தவெகவின் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேகச் செயலி   நாளை அறிமுகம் செய்கிறார் விஜய்
Advertisement

தவெக  தலைவர் விஜய், நாளை அக்கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேகச் செயலியை அறிமுகம் செய்து வைக்கிறார என தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில், கழகத்தில் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியை மேற்கொள்ள, உறுப்பினர் சேர்க்கை அணியை தலைவர் விஜய் ஏற்கெனவே அறிவித்துள்ளார். கடந்த செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, இரண்டு கோடி உறுப்பினர்களைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைக்கும் வகையில், நாளை (30.07.2025) காலை 11 மணி அளவில் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேகச் செயலி அறிமுக நிகழ்வு, நடைபெற உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலகத்தில் தவெக தலைவர் விஜய், இந்தப் பிரத்யேகச் செயலியை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்து உறுப்பினர் சேர்க்கைப் பணியைத் துவக்கி வைக்க உள்ளார்.ஏற்கெனவே https://tvk.family என்ற இணையத்தளம் வாயிலாக பொதுமக்கள் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொள்ளும் நடைமுறை தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பதை அனைவரும் அறிவீர்கள். தற்போது நம் தலைவர் அறிமுகப்படுத்தும் இந்தச் செயலி வாயிலாகவும் பொதுமக்கள் தங்களை கழகத்தில் இணைத்துக்கொள்ளலாம்”

எனத் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement