For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"விஜய் நல்லா பேசுகிறார், நல்லா நடிக்கிறார்" - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா என தெரியவில்லை என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
02:01 PM Sep 20, 2025 IST | Web Editor
விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா என தெரியவில்லை என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 விஜய் நல்லா பேசுகிறார்  நல்லா நடிக்கிறார்    தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
Advertisement

கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செந்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. கீழடிக்கு உண்மையாக நிதி கொடுத்தது மத்திய அரசு. தேர்தல் ஆணையத்தில் அங்கிகரிக்கப்படாத கட்சி மக்கள் நீதி மய்யம்.

Advertisement

திமுகவின் ஊதுகோலாக மாறிவிட்டார் கமல். சரத்குமார் கட்சியை தானே இணைத்தார். மக்கள் நீதிமய்யம் அங்கீகாரத்தை இழந்திருக்கிறது. தேசிய ஜனநாயக் கூட்டணி 2026-ல் ஒற்றுமையாக போட்டி போடும். திமுக, கூட்டணி கட்சியின் நம்பிக்கை, மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது.

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா என தெரியவில்லை. திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடமை எங்களுக்கும் இருக்கு, விஜய்க்கும் இருக்கு. விஜய் நல்லா பேசுகிறார், நல்லா நடிக்கிறார். காவல்துறை முற்றிலுமாக திமுக வோடு சேர்ந்துவிட்டார்கள். விஜய் சதவீத்ததை பிரிக்கலாம், அவர் எடுப்பது திமுகவின் ஓட்டுக்கள் தான். எந்த கொள்கை உள்ள தலைவர்கள் யாரையும் ஒருமையில் பேசக்கூடாது. படிப்பில் கூட உதயநிதியை விட நான் அதிகம். அறிவில்லையா என உதயநிதி பேசுகிறார். உண்மையான தமிழர்கள் மரியாதை கொடுத்து பேசுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement