For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“அந்த ரூட்டில் விஜய் கரெக்ட்-தான்” - இயக்குநர் பேரரசு பேட்டி!

ஆளும் கட்சியை எதிர்த்தால்தான் வளர முடியும் என்றும் அந்த அந்த ரூட்டில் விஜய் செய்வது சரி என்றும் இயக்குநர் பேரரசு பேட்டியளித்துள்ளார்.
06:22 PM Mar 16, 2025 IST | Web Editor
“அந்த ரூட்டில் விஜய் கரெக்ட் தான்”    இயக்குநர் பேரரசு பேட்டி
Advertisement

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் குறித்து ஈரோட்டில் இயக்குநர் பேரரசு செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

Advertisement

அவர் பேசியதாவது,  “ஒரு வருடம் முடித்து இப்போது விஜய் இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இன்னும் அறிக்கைதான் வருகிறது. இன்னும் களத்தில் அவர் இறங்க வேண்டி இருக்கிறது. அவர் ஆழம் பார்த்து இறங்குவார் என்று நினைக்கிறேன். இன்னும் மக்களையும் செய்தியாளர்களையும் அவர் சந்திக்க வேண்டும்.  ஏற்கெனவே உள்ள சில கட்சிகளின் கொள்கைகளை விஜய் சொல்லும்போது அது  புதிதாக இருக்காது.

இருக்கிற கட்சிகளின் சாயல் இருக்க கூடாது. மக்களுக்கான புதிய திட்டங்கள் என்னவென்று சொன்னால்தான் மக்களுக்கு நம்பிக்கை வரும். இப்போதைக்கு விஜய்க்கு அவரது ரசிகர்கள் தொண்டர்களாக மாறியுள்ளனர். கண்டிப்பாக அவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆனால், மக்கள் நம்பிக்கையை அவர் பெற வேண்டும். அதற்கு அவர் புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

ஒரு கட்சி வளர வேண்டுமென்றால் ஆளும் கட்சியை எதிர்த்தால்தான் வளர முடியும். அப்போதுதான் மக்களால் கவனிக்க படுவார்கள். அந்த ரூட்டில் அவர் கரெக்ட்-தான் . ஆளும் கட்சியை விமர்ச்சிக்காமல் ஒரு கட்சி வளராது. மக்களால் கவனிக்கப்படாது. ஆளும் கட்சியை எதிர்க்கும்போதுதான் தைரியம் தெரிய வரும். இதில் விஜய் தைரியமாகத்தான் இருக்கிறார். அது வரவேற்கக் கூடியது.

விஜய் வெறும் அரசியல் கட்சித் தலைவர் இல்லை. அவர் தமிழ்நாட்டில் முன்னனி நடிகர். கோடிக்கணக்காண ரசிகர்களை கொண்டவர். மக்கள் மற்ற தலைவர்களை பார்ப்பதற்கும் இவரை பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அதற்காகத்தான் அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு. திரைத் துறையில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் நிறைய படங்களை ரிலீஸ் செய்கிறார்கள். இதை அழுத்தம் என்று சொல்லமுடியாது.

அந்த நிறுவனம் ஒரு படத்தை விலைக்கு கேட்கும்போது, கொடுக்கவில்லையென்றால் பிரச்சனை வந்துவிடுமோ என்ற பயம் வரும். அந்த பயம் இருக்க கூடாது. விஜய் கட்சி ஆரம்பித்ததும் படங்களில் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டார். அவர் இன்னும் தேர்தலை சந்தித்து பதவிக்கு வரவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் நடிப்பதை நிறுத்துவதாக கூறினார். ஆனால் துணை முதலமைச்சர் பதவியில் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் படங்கள் தயாரிப்பதை  தவிர்த்திருக்க வேண்டும் இது அவருக்கு ஒரு நெருடல்தான்”

இவ்வாறு இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement